செய்கு சலாஹுதீன் பள்ளி (மேலப்பள்ளி)
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள். காயல் நகரிலுள்ள பள்ளிகள் இரு மினாராக்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒளு செய்வதற்கென ஹவுளுகள் கட்டப்பட்டுள்ளன.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…