முஅஸ்கர் ரஹ்மான் பெண்கள் அரபிக்கல்லூரி
மகளிரின் மார்க்க அறிவை மேம்படுத்தவும் அவர்களின் கலாச்சாரத்தை புனித இஸ்லாமிய நெறியில் சீரமைக்கவும் அவர்களின் ஒழுக்கவியலை மேம்படுத்தவும் காயல்பட்டனத்தில் 1988ம் ஆண்டு முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி இறையருளால் துவக்கப்பட்டது.
இவ்விருபது ஆண்டு காலத்தில் 450க்கும் அதிகமான ஆலிமாக்களை உருவாக்கிய இக்கல்லூரி கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு முன்பு பெண்களுக்கென ஹிஃப்ழுல் குர்ஆன் மத்ரஸாவையும் துவக்கியது. அதில் இன்றுவரை 65க்கும் மேற்பட்ட ஹாஃபிழாக்கள் உருவாகியுள்ளார்கள்.
இதன்றி பெண்களைக் கொண்டே பெண்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்க்க பிரச்சாரத்தையும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ளது. ஏழை மாணவிகளுக்கு உதவுதல்இ தஜ்வீது அடிப்படையில் குர்ஆன் கற்றுக் கொடுத்தல் நல்ல நூல்கள் வெளியிடுதல் என்பது போன்ற பல நற்சேவைகளில் ஈடுபடுவதுடன் மாணவியருக்கு கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சியும் கற்றுக் கொடுக்கிறது. மேலும் சிறப்பான ஒரு நூலகத்தையும் இயக்கி வருகிறது. மெளலவி அல்ஹாபிழ் H.A.அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி அவர்களால் இம்மத்ரஸா நடத்தப்படுகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…