குருவித்துறைப் பள்ளி
வேதப் புராணம் தந்த மகான் பூவாறில் மறைந்து வாழும் அல்லாமா நூஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வர் அல் ஆரிபு பில்லாஹ் செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஹிஜ்ரி 1214 ல் இப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டது.
அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சன்மார்க்க சபை இத்துடன் உள்ளது. இளைஞர் ஐக்கிய முண்ணனி என்ற பொது நல சங்கமும் இதன் வளாகத்தில் உள்ளது.
இப் பள்ளி மைய வாடியில் அடங்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்:
1. மகான் அல் ஆரிபு பில்லாஹ் செய்யிது அஹ்மது வலியுல்லாஹ் அவர்கள் மறைவு ஹஜ்ரி 1216
2. அல் ஹாஜ் முஹம்மது இபுறாகிம் அவ்லியா ஸாஹிபு கண்டி ஆலிம் அவர்கள். மறைவு ஹஜ்ரி 1353
3. அல்லாமா நஹ்வி செய்யிது அஹ்மது ஆலிம் முஃப்தி அவர்கள். மறைவு ஹஜ்ரி 1362
4. அல்ஹாஜ் நூஹ் லெப்பை ஆலிம் வேலூர் ஆலிம் அவர்கள். மறைவு ஹஜ்ரி 1365
5. அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் சூரன்குடி ஆலிம் அவர்கள். மறைவு ஹஜ்ரி 1357
6. அல்ஹாஜ்அல்லாமா நஹ்வி செ.யி. முஹம்மது இஸ்மாயில் ஆலிம் முஃப்தி அவர்கள். மறைவு ஹிஜ்ரி 1376
7. பள்ளிக்கு உப்பு பாத்தி வஃபு செய்த அல்ஹாஜ் முஹம்மது பாகிh சாகிபு அவர்கள். மறைவு ஹிஜ்ரி 1305
8. அல்ஹாஜ் சா. சாகுல் ஹமீது ஆலிம் முஃப்தின். மறைவு ஹிஜ்ரி1405.
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள். காயல் நகரிலுள்ள பள்ளிகள் இரு மினாராக்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒளு செய்வதற்கென ஹவுளுகள் கட்டப்பட்டுள்ளன.
1. ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1முதல் 12வரை சுப்ஹான மௌலிது ஓதுதல்.இம்மாத இறுதியில் ஹழரத் நூஹ் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி.
2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மௌலிது ஷரிபு ஓதுதல்.
3. பிரதிவாரம் வெள்ளிக் கிழமை சுப்ஹுக்குப் பின் புர்தா ஷரீபு ஓதுதல்.
4. துல்ஹஜ் பிறை 9 அன்று 14 மகான்கள் கந்தூரி – மஃரிபுக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதுதல்;, காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், பயான் நடைபெறும். சுப்ஹுக்குப் பின் அல்லாமா ஹாமிது வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி.
5;. தினமும் காலை,மாலை சிறுவர்களுக்கு குர்ஆன் மத்ரஸா நடைபெறுகிறது.
6. ரமலான் மாதம் தினமும் கத்முல் குர்ஆன் லுஹருக்குப் பின் ஓதுதல்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…