Home Uncategorized மஹ்பூபு சுபுஹானி சங்கம்
Uncategorized - பொது - December 16, 2008

மஹ்பூபு சுபுஹானி சங்கம்

      காயல்பட்டணம் ஆறாம் பள்ளித் தெருவில் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ளது.ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குடை நாயகமாகக் கொண்டு 1-10-1914 ல் ஆரம்பிக்கப்பட்டது.
1. ரபீயுல் அவ்வல் மாதம் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பெயரிலும்,  ரபீயுல் ஆகிர் மாதம் ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரிலும் மௌலிது ஷரீஃப் ஓதுதல்.
2. பிரதி வாரம் வெள்ளி,திங்கள் இரவு ராத்திபத்துல் பஃதாதி எனும் காதிரிய்யா திக்ரும், காலையில் புர்தா ஷரீஃபும் ஓதுதல்.
3. மற்ற மகான்களின் மௌலிது ஷரீஃபுகளும் அந்தந்த மாதங்களில் ஓதுதல்.
4. தற்காலத்தில் தோன்றிய புதுமையான, அதி நவீன கொள்கை என்று பறை சாற்றிக் கொள்ளும் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி, இபுனு தைமிய்யா,அபுல் அஃலா மௌதூதி, கலீல் அஹ்மது அம்பேட்டி, ரஷP அஹ்மது கங்கோஹி, அஷ;ரப் அலி தானவி, இல்யாஸ் காந்தலவி மற்றும் இவர்கள் போன்ற வழி கேடர்களை மக்கள் மத்தியில் இனம் காட்டுவதோடு இவர்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழப்புணர்ச்சி ஏற்படுத்துதல்.
5. அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபடுதல்.
6. வாசக சாலை அமைத்தல்.
7. நன்மையான, நல்ல காரியங்களை நாளும் செய்வது.
8. ; நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை இறுதி நபியாகவும், புனித இஸ்லாத்தை நம் வழியாகவும், வுhன் மறை குர்ஆனை நமது மறையாகவும் இன்பத்தமிழை நம் மொழியாகவும், பாரத தேசத்தை நம் தாய் நாடாகவும் ஏற்று நடப்பதோடு இதர சமூக மக்களுடன் பரஸ்பர நட்புடனும், ஒற்றுமையுடனும் வாழ்வது.
9. மதம் என்ற பெயரில் மார்க்கத்தில் குழப்பம் விளைவிப்பதோடு தேச விரோத செயல்களையும், வகுப்பு வாதங்களையும் தூண்டி முன்னால் பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அரசால் நம் தேசத்தினுடைய ஒருமைப் பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடியவர்கள் என்று கருதி தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாகிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தேச விரோத கொள்கை (கிலாபத்) இஸ்லாமிய ஆட்சி முறை வேண்டும் என்பதை வன்மையாக கண்டிப்பதோடு தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் மக்களுக்கு எடுத்துரைப்பது.
     1-10-1914 மற்றும் 9-9-1953 ஆகிய இரு சட்டதிட்டங்களுடன் 23-10-92 அன்று கூடிய கூட்டத்தில் சில புதிய சட்டதிட்டங்களையும் சேர்த்து புதிய சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு உறுப்பினர்கள் அனைவர்களும் ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…