Home Uncategorized ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

      சுலைமான் வலி நாயகத்திற்கு ஐந்தாவது மகனாக கி.பி. 1051 ல் பிறந்தார்கள். இவர்களுக்கு தம் ஞான குரு பெரிய சம்சுத்தீன் வலி நாயபத்தின் தந்தையார் ஸலாஹுத்தீன்  அவர்கள் பெயரைச் சூட்டினார்கள். தம் சகோதரர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடமே அனைத்துக் கல்விகளையும் கற்று தேர்ந்தார்கள். இவர்கள் அரபியில் 'உம்தத்துல் ஹுஜ்ஜாஜ்' என்ற நூலும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது 'லர்ரஃபல் ஆலம்' என்ற புகழ்ப்பாவையும்  இயற்றியுள்ளார்கள்.
     வித்ரியாவிற்கு 'தஸ்தீர்'( நூலின் முதல் கண்ணிக்கு இணையாக அதன்பின் ஒரு கண்ணியையும், இரண்டாவது கண்ணிக்கு இணையாக அதன் முன் ஒரு கண்ணியையும் பாடி இணைப்பதாகும்) செய்துள்ளார்கள்.
விலாயத்து பெற்ற மகானாக திகழ்ந்த இவர்கள் களக்காடு ஏர்வாடியில் குடியேறி வாழ்ந்து அங்கேயே ஹிஜ்ரி 1098, துல்ஹஜ் பிறை 15 சனிக்கிழமை தங்களது 47 வது வயதில் மறைந்து அடங்கப்பட்டுள்ளார்கள்.       வருடந்தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…