Home Uncategorized ரபியுல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்
Uncategorized - பொது - October 16, 2010

ரபியுல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்

ரபியுல் ஆகிர் (முஹிய்யத்தீன் ஆண்டவர் மாதம்)

பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூர்p வைபவ கொடியே ற்றம். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் புனித மௌலிது ஷரீஃப் ஓத ஆரம்பித்தல். பெண்கள் மத்தியில் காரண சரித்திரம் வாசிக்கப்படுகிறது.மஹ்லறாவில் காலை கத்முல் குர்ஆன் ஓத ஆரம்பித்தல்.

பிறை 6-மஹ்லறா நிறுவனர் மௌலானா அப்துல்லா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் கந்தூரி மஹ்லறாவில் நடைபெறுகிறது.

பிறை 11-முஹிய்யத்தீன் ஆண்வர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி  தினம். மௌலிது கடைசி நாள்.

பிறை 11- குத்பிய்யா மன்ஜிலில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ்.
பிறை 11பொது சேவை செய்தவர்களுக்கு குத்பிய்யா மன்ஜிலில் நடைபெறும்  விழாவில் ஒரு பவுன் தங்கம் மர்ஹும்
டி.எம்.ஆர்.முஹம்மது ஷாஃபி அவர்கள் நினைவாக வழங்கப்படுகிறது.

பிறை13- மஹ்லறாவில் முஹிய்யத்தீன் ஆண்வர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி. காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியிலிருந்து மஹ்லறாவிற்கு கந்தூரியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.இரவில் மாபெரும் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ்.

பிறை 14- முஹிய்யத்தீன் ஆண்வர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூ ரி மஹ்லறாவில் மாபெரும் விருந்து வைபவம்.

பிறை 25 மஹான்களான லெப்பை அப்பா நாதாக்களின் கந்தூரி வைபவம

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…