ரமலான் மாத நிகழ்ச்சிகள்
ரமலான்.
பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜிலில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறுகிறது. பிறை 1 முதல் 30 வரை வித்ரிய்யாவிற்கு விளக்கவுரை காலையில் நடைபெறுகிறது.
பிறை1- புனித ரமலான் நோன்பு ஆரம்பம். இரவு தராவீஹ் தொழுகையும், வித்ரிய்யா மஜ்லிஸும் ஓதப்படுகிறது.
அநேகமான மையவாடிகள் உள்ள பள்ளிவாயில்களில் பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றப்படுகிறது. நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க எல்லா பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிறை11- பெண்கள் தைக்காக்களில் ஸெய்யிதா கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மௌலிது ஓதப்படுகிறது.
பிறை12- பெண்கள் தைக்காக்களில் ஸெய்யிதா பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தலைப்பாத்திஹா ஓதப்படுகிறது.
பிறை 24- ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி தினத்தை முன்னிட்டு காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இரவில் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறுகிறது. காலையில் ஸூபி மன்ஜிலில் அஸர் வரை கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுகிறது.
பிறை27- புனித லைலத்துல் கத்ரு இரவு. பள்ளி, தைக்காக்களில் விசேஷ தொழுகை, திக்ருகள் நடைபெறுகிறது.
பிறை 27,29/30பள்ளிகளில் தமாம் செய்யப்பட்டு சஹர் சாப்பாடு நடைபெறுகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…