காயல்பட்டணத்தின் முத்திரை பதித்த ஹாபிழ்கள்!
காயல்பட்டணத்தின் முத்திரை பதித்த ஹாபிழ்கள்!
20 ம் நூற்றாண்டில் ஒரே நாளில் 8 மணி நேரத்தில் நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகையில் குர்-ஆன் முழுவதையும் ஓதி தொழ வைத்த ஹாபிழ்களின் பட்டியல்:
1. மர்ஹும் அல்ஹாபிழ் காரி லெ. சேகு முஹம்மது லெப்பை ஆலிம் கி.பி. 1905 ம் வருடம் இரட்டைக் குளம் பள்ளியில் தொழ வைத்தார்கள். இவர்கள் தொழவைக்கும் போது இவர்களை கட்டெறும்பு கடித்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் இவர்கள் தொழுகையை கைவிடாமல் தொழுது முடித்தார்கள். தொழுதவுடன் மயக்கமாகிவிட்டார்கள். அதன்பின் மக்கள் இவர்களை வீட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். இதனால் இவர்களுக்கு கட்டெறும்பு கடித்த சேகு முஹம்மது லெப்பை என்ற பெயர் வரக்காரணமாயிற்று. இவர்களின் அடக்கஸ்தலம் குத்பா பெரிய பள்ளியில் ரூமில் உள்ளது. இவர்களின் முக்கிய மாணவர்களாக திகழ்ந்தவர்கள் அல்ஹாபிழ் எம்.கே.ஓ.எம். மீராசாகிபு ஆலிம் மற்றும் சுலைமான் லெப்பை ஆலிம் ஆகியோர். கலீபா முஹம்மதலி ஆலிம் மஹ்லரி அவர்கள் இவர்களின் திருப்பேரர் ஆவார்கள்.
ஏழு வகை கிராஅத்தை முறைப்படி தொழ வைத்த பெருமை காயல் நகரைச் சார்ந்த இவர்களுக்கு மட்டுமே உண்டு. மேலும் இவர்கள் ஓதுதலை பறவைகளும், விலங்கினங்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அக் காலத்தில் சிங்கப்பூர் சென்று தொழ வைத்த காயலர் இவர்கள் மட்டுமே! இன்றுவரை ஏழு வகை கிராஅத் ஓதி தொழ வைக்கக் கூடிய காயலர்கள் இவர்களுக்குப் பின் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின்தந்தை குத்பா பெரியபள்ளியில் உள்ளே அமைந்திருக்கும் அறையில் அடங்கப்பட்டுள்ளார்கள். பெரியபள்ளியை விரிவாக்கம் செய்யும்போது இந்த கப்ரு ஷரீஃபை உடைக்க முற்பட்டபோது விபரீதங்கள் நடைபெற்று, அதன்பின் அதை அப்படியே விட்டுவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
2. மர்ஹும் அல்ஹாபிழ் M.K.O.M. மீராசாகிபு ஆலிம் அஹ்மது நெய்னார் பள்ளியில் கி.பி. 1923 லும், இலங்கை கொழும்பு சம்மான் கோட் பள்ளியில் 1930லும் தொழ வைத்துள்ளார்கள்.
3. மர்ஹும் அல்ஹாஜ், அல்ஹாபிழ் வெள்ளை தம்பி லெப்பை ஆலிம் என்ற நூகு தம்பி லெப்பை ஆலிம் அவர்கள் சிலோனில் தொழ வைத்துள்ளார்கள். இவர்கள் மர்ஹும் அப்துல் ஹை ஆலிம் அவர்களின் தந்தை.
4. அல்ஹாபிழ் அபுபக்கர் சித்தீக் ஆலிம் அவர்கள் சென்னையில் 1910 ல் தொழ வைத்துள்ளார்கள். இவர்கள் ஏ.எஸ்.ஜமால் ஹாஜி அவர்களின் தந்தை.
5. அல்ஹாபிழ் முஹ்யித்தீன் தம்பி ஆலிம் அவர்கள்– மஹ்லறா முன்னாள் முதல்வர்.
6. அல்ஹாபிழ் பாளையம் அப்துற் றஹீம் ஆலிம் அவர்கள்– 1923ல் கொழும்பு சம்மான் கோட் பள்ளியிலும், 1933ல் புதுப்பள்ளியிலும் தொழ வைத்துள்ளார்கள்.
7. அல்ஹாபிழ் முஹம்மது அபுபக்கர் அஜ்வாஜ் ஆலிம் அவர்கள்– 1950 ல் கொழும்பு சம்மான் கோட் பள்ளியிலும், மருதானைப் பள்ளியிலும் தொழ வைத்துள்ளார்கள்.
8. அல்ஹாஜ் அல்ஹாபிழ் N.K. முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் –1945ல் ஜாவியாவில் தொழ வைத்துள்ளார்கள்.
9. அல்ஹாஜ் அல்ஹாபிழ் சாகுல் ஹமீது ஆலிம் அவர்கள் 1960ல் மொகுதூம் பள்ளியில் தொழ வைத்துள்ளார்கள்.
10. அல்ஹாஜ் அல்ஹாபிழ் M.A. நூஹு ஆலிம் அவர்கள்-1975 ல் ஜாவியாவில் தொழவைத்துள்ளார்கள்.
11. அல்ஹாஜ் அல்ஹாபிழ் சேகு அப்துல்காதிர் மிஸ்பாஹி ஆலிம் அவர்கள் 1976ல் கொழும்பு சம்மான்கோட்பள்ளியில் தொழ வைத்துள்ளார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…