Home Uncategorized காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உருவான வரலாறு
Uncategorized - பொது - October 25, 2010

காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உருவான வரலாறு

காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உருவான வரலாறு:

     27-01-1886 ல் பஞ்சாயத்து ரூல்-'கிராம நிர்வாகச் சட்டம்சென்னை கவர்னரால் (G.O.MS.No. 122 L.F.) அறிமுகப்படுத்தப்பட்டது. அவ் வருடமே காயல்பட்டணம் பஞ்சாயத்து போர்டு உருவாக்கப்பட்டு திருநெல்வேலி கலெக்டரால் காயல்பட்டணம் கஸ்டம்ஸ் ஆபிஸர் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆங்கிலேயர். 1895 ல் திரு.பொன்னையா நாடார் அவர்கள் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 1913 வரை தலைவராக நீடித்தார். 1908 ல் காயல்பட்டணம் கிராமம் சர்வே செய்யப்பட்டது.
1911 ல் லோக்கல் பண்ட் டிஸ்பன்ஸரி உருவாக்கப்பட்டது. தங்கள் பெண் குழந்தைகளுக்கு தாயார் அவர்கள் பஞ்சாயத்து அலுவலகம் மூலம் பெயரை மாற்றிக் கொடுக்கும் சிறப்பு நடைமுறை அமலுக்கு வந்தது. அது இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.
1914-1918 வரை ஜனாப்.முஹம்மது தம்பி அவர்கள் ஒரு மனதாக பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1916 ல் திருநெல்வேலி கலெக்டரை ஊருக்கு அழைத்து வந்து நகரின் குடிரீர்த் தேவைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். இது இவரது மகனார் M.K.T. முஹம்மது அபுபக்கர் அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டது.

1919 ல் குளம் சேக்னா லெப்பை அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1920 ல் கிராம ரோடு சர்வே செய்யப்பட்டது. பீல்டு மேப்பும் வரையப்பட்டது. 1920ல் காயல்பட்டணம் உப்பு சர்கிள் தூத்துக்குடி உப்பு சர்கிளாக அரசால் மாற்றப்பட்டது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் வரை காயல்பட்டணம் வழியாக ரயில்வே தடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. காயல்பட்டணத்தின் ஒரிஜினல் ஸ்டேசன் என்பது தற்போதைய ஆறுமுகநேரி ஸ்டேசன்தான். 1924ல் தற்போதைய காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் உருவாக்கப்பட்டு பழைய ரயில்வே ஸ்டேசன் ஆறுமுகநேரி ரெயில்வே ஸ்டேசனாக மாற்றப்பட்டது.
1925-29 தோல்சாப் முஹம்மது உவைஸ்னா லெப்பை நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1929ல் காயல்பட்டணம் பிரிக்கப்பட்டு ஆறுமுகநேரி பஞ்சாயத்து (02-11-1929) உருவாக்கப்பட்டது.
1930-34 ஹாஜி முஹம்மது ஹஸன் மரைக்கார் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1934-36 A.P. செய்யிது முஹம்மது புஹாரி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1936-47 தோல்சாப் செய்யிது இப்றாஹிம் லெப்பைஅவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1947-53 கத்தீபு S.E.செய்யிது இப்றாஹிம் ஹாஜி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1952 ல் பஞ்சாயத்து போர்டு மேஜர் பஞ்சாயத்தாக உயர்ந்தது.
1953-65 ஹாஜி M.K.T. அபுபக்கர் ஹாஜி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். உதவி தலைவராக கதீபு முஹம்மது அபுபக்கர் உதவி தலைவரானார்கள். 1955 எலக்ட்ரிக் ஊருக்கு வந்தது. ரோடுகளில் லைட் போடப்பட்டது.1956 காயல்பட்டணம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
1965-70 பாவலர் S.S. அப்துல் காதர் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். ஹாஜி L.S. இப்றாஹிம் உதவி தலைவரானார்கள். இந்த காலத்தில்தான் சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ் உருவாக்கப்பட்டது.
1970-73 ஹாஜி L.K.லெப்பைத் தம்பி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1973-79 V.M.S. அனுசுத்தீன் அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1979-86 வரை நிர்வாக அதிகாரி அவர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.
1982ல் தேர்வு நிலை பேரூராட்சியாக உயர்த்தப்பட்டது.
1986 ஹாஜி V.M.S.லெப்பை அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். எம்.என். சொளுக்கு அப்துல் காதர் அவர்கள் உதவி தலைவரானார்கள்.
1967 ல் தோல்சாப்பு T.M.E. அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் குடும்பத்தார்கள் மற்றும் C.M.K. முஹம்மது நூகு ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட நிலம் தானமாக வழங்கினார்கள்.
1951ல் M.T. செய்யிது இப்றாஹிம் குடும்பத்தார் மற்றும் புளியங்கொட்டை செய்யிது முஹம்மது அவர்கள் தற்போதைய புதிய பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை பஞ்சாயத்திற்கு கொடுத்தார்கள். இங்கு பாவலர் பூங்கா இருந்தது. கால்நடை மருத்துவமனையும் இங்குதான் செயல்பட்டது.
1992-1995 நிர்வாக அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது.
1996 ல் K.M.E.நாச்சி தம்பி அவர்கள் பஞ்சாயத்து தலைவரானார்கள். S.செய்யிது அஹ்மது அவர்கள் உதவி தலைவரானார்கள்.
2001 ல் திருமதி வஹீதா அவர்கள் பஞ்சாயத்து தலைவரானார்கள்.
      தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு அதன் தலைவராக ஹாஜி வாவு செய்யிது அப்துற் றஹ்மான் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…