Home செய்திகள் நமது ஊரில் குளங்கள் எங்கே?
செய்திகள் - November 28, 2021

நமது ஊரில் குளங்கள் எங்கே?

KayalpatnamWaterPools

நமது ஊரில் குளங்கள் எங்கே ?

மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது

நாட்கணக்கில் கட்டிக் கிடக்கும் தண்ணீரால் வீடுகள் கட்டிடங்களின் அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பூமியில் புதைகின்றது விரிசல்கள் ஏற்படுகின்றன
கட்டிடங்கள் பலவீனம் ஆகின்றன

மரங்கள், மின் கம்பங்கள் சாய்கின்றன

நல்ல தண்ணீருடன் குப்பையும் கலந்து அசுத்தம் ஆகின்றது நிலத்தடி நீரும் கெட்டுப் போக வழி வைக்கின்றது

நகரெங்கும் துர்நாற்றம்

கொசுக்கள் நோய்க்கிருமிகள் பெறுகின்றன

நமது ஊரில் குளங்கள் எங்கே ?

போனால் போகட்டும் புதிதாய் குளங்களை புறம்போக்கு நிலங்களில் உருவாக்கலாமே

வடிகால் வசதியில்லாத சாலைகள்

போட்டி போட்டு சாலைகளை உயர்த்துவதால் மழை தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் நம்மை சூழ்ந்துள்ளது

தண்ணீர் கடலுக்கு ஓடும் பகுதிகளில் குறுக்காக உயரமான சாலைகள் தடுப்பணைகளாக மாறிவிட்டன அதனடியில் குழாய்கள் பதித்து இருக்கலாம்.

பழைய தண்ணீர் செல்லும் பாதைகளை கண்டறிந்து வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்

அதில் ஆங்காங்கே குளங்கள் அமைத்து நீரைத் தேக்க வேண்டும்

உபரி நீரை கடலுக்குச் செல்ல வழி விடவேண்டும்

இதன் மூலம் கடும் மழை மற்றும் கொடும் வெயிலில் இருந்தும் நமக்கு தீர்வு கிடைக்கும்

இதுவே நம் ஊரின் முக்கிய அடிப்படைத் தேவை

பொதுநல அமைப்புகள் நமது ஊர் அறிஞர்களை ஒன்றுதிரட்டி இதற்காக தீர்வு தேட வேண்டும்

நகராட்சி நடைமுறைப்படுத்த நிர்பந்திக்க வேண்டும்

தங்கள் கருத்துகளையும் பதியுங்கள்

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…