காயல்பட்டணத்தில் ஏர்டெல் ஃபைபர் தொடக்கம்
மெட்ரோ நகரங்களுக்கு இணையான அதிவேக இன்டர்நெட் + OTT எண்டர்டெயின்மெண்ட் இப்போது காயல்பட்டணத்தில்!
காயல்பட்டணம் இன்று அதிவேக இன்டர்நெட் காலத்தில் அதிகாரப்பூர்வமாக கால் வைத்துள்ளது! ஏர்டெல் ஃபைபர், இன்று காலை மகாத்மா காந்தி வளைவு (புதிய பேருந்து நிலையம் எதிரில்) பகுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம் நகராட்சி தலைவர், பல முக்கியமான பிரபலங்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதன் மூலம் காயல்பட்டணத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் மைல்கல் அமைந்துள்ளது.
ஏர்டெல் ஃபைபர் மூலம் காயல்பட்டண மக்கள் பெறவிருப்பது:
✅ மெட்ரோ சிட்டி தரத்தில் அதிவேக இன்டர்நெட் – மலிவான விலையில்
✅ வேலை, கல்வி, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான தடையற்ற இணைப்பு
✅ OTT பிளாட்ஃபார்ம்கள் – Netflix, Amazon Prime, Disney+ Hotstar, Sun NXT உள்ளிட்டவை பண்டில் செய்யப்பட்ட பிளான்களில் கிடைக்கும்
📌 டாரிஃப் பிளான்கள் மற்றும் பேக்கேஜ் விவரங்கள் விரைவில் தனி பதிவாக Kayalpatnam.in-ல் வெளியிடப்படும்.
இந்த தொடக்கம், காயல்பட்டணத்தின் வேலை, கல்வி, வணிகம் மற்றும் பொழுதுபோக்கை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👉 Kayalpatnam.in News-ல் தொடர்ந்தும் அப்டேட்ஸ் மற்றும் இன்றைய நிகழ்வின் சிறப்பு புகைப்படங்களை பார்க்க மறக்காதீர்கள்!
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…