Home Uncategorized திராட்சை
Uncategorized - October 29, 2010

திராட்சை

 

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.

உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.

சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்)

உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.

எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலியல்லாஹு அன்ஹு) என்பவர் கேட்டார். …குடிக்க வேண்டாம் என்று அதற்கு பதில் கிடைத்தது.

திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத்திர்மிதீ)

சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்ப தில்லை. (அபூநவீம் பதஹுல் கபீர்)

திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி நாயகம் தெளிவாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம். 100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.

இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.

திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

ஆக்கம் :சிவகுமார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…