Home Uncategorized பூமி
Uncategorized - பொது - November 7, 2010

பூமி

சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம், 

 

மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி,

 

அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக இருக்கிறது. இந்த கிரகம் சுமார் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. 
 
பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் அதிகம்;. மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
 
செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.
 
புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. 
 
சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதற்கான சர்தியக் கூறுகள் அறியப்படுகின்றது, 
 
பூமி தனது அச்சில் சுழல்வதோடு சூரியனையும் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதற்கான மொத்த கால அளவு 365.26 நாட்கள். தன்னைத்தானே பூமி ஒருமுறை சுற்ற 24 மணிநேர கால அளவு ஆகிறது. புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4டிகிரி செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை தோற்றுவிக்கிறது பூமியின் ஒரே இயற்கையான செயற்கை கோள் சந்திரன், இது பூமியைச் சுற்றி வருகிறது.இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை  நிலைப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…