புள்ளி மாற்றும் வழக்கம்.
மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு சென்று குடியேறுவது வழக்கமாக இருப்பதால், பெண் வீட்டார் தங்கள் பெண்ணுக்கு வீடு கொடுப்பது என்ற நடைமுறை வந்து இதனுடன் ஒட்டிக் கொண்டது. அதன்படி பெண்ணிற்கு ஒரு வீடு கொடுக்க வேண்டும். அதில்தான் பெண்ணும் பெண்ணின் தாயார், தந்தை, அண்ணன், தம்பி, தங்கைமார்கள் இருப்பார்கள்.
ஒருவருக்கு ஒரு பெண்ணிற்கு மேல் இருந்தால் கடைசியாக இருக்கும் பெண்ணிற்கு கொடுக்கும் வீட்டில்தான் பெண்ணின் தாய், தந்தை, அண்ணன், தம்பிகள் இருப்பார்கள். அண்ணன், தம்பிகக்கு நடக்கும் விசேஷங்கள் இந்த வீட்டிலிருந்தே நடக்கும்.
ஒருவருக்கு பெண் பிள்ளைகளே இல்லை என்றால், தாயார் அவர்கள் அந்த வீட்டை தம் மகன்களுக்கோ, பேத்திமார்களுக்கோ, அல்லது தான் வளர்க்கும் பெண் பிள்ளைக்கோ கொடுப்பது வழக்கம்.
இவ்வாறு பெண்ணிற்கு வீடு கொடுப்பதால், அந்த வீட்டை பெண் பெயருக்கு மாற்றி கொடுக்க வேண்டும். இதற்கு முஹம்மதியன் சட்டப்படி வாய்மொழி நன்கெடை மூலம் மாற்றிக் கொடுக்கிறார்கள். இதற்கு 'புள்ளிமாற்றுதல்' என்று பெயர். இதன் மூலம் ஒரு வீடானது தம் தாயாருடைய பெயரிலிருந்து தம் மகளுடைய பெயருக்கு சட்டப்படி மாறிவிடுகிறது. வீட்டுத் தீர்வையும் மாறி விடும். பத்திரப்பதிவுதேவையில்லை. இந்த முறைகாயல்பட்டணத்திற்கென்றே உள்ள நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…