காலண்டர்
நாள் என்பது பூமி தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும்.
பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள். பகல் நேரம் எப்பொழுதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஓர் ஆண்டின் வௌ;வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வௌ;வேறாக இருக்கின்றது. அத்துடன் பூமி மையக் கோட்டுக்குத் தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும்.
பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும்.
பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும்.
ஜார்ஜியன் முறையில் நாள்
சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணித்தியாலம், நிமிடம், நொடி எனத் துணைப் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1 நாள் 24 மணித்தியாலங்கள்
1 மணித்தியாலம் 60 நிமிடங்கள்
1 நிமிடம் 60 நொடிகள்
ஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவு 12 மணிக்குப் பின் ஆரம்பமாகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணால் குறிப்பிடப்படுகின்றது. மேலும் ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்று முதல் முப்பத்தி ஒன்று வரைக்கும்; இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. ஒன்றாம் தேதி, இரண்டாம் தேதி என்று முறையே அழைக்கப்படுகின்றது.ஏழு நாட்களை ஒரு வாரம் என்று அழைக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு கிழமைகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
மாதம் என்பது ஒரு கால அளவாகும். வௌ;வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வௌ;வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. குறிப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.
சூரிய மாதம்
சூரிய மாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு நாள் ஆகும். பூமி சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றி வர 365.25 நாட்கள் ஆகிறது. அதை ஒரு வருடம் என்று அழைக்கிறார்கள். சூரியன் இருக்கும் காலப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடம் 12 ஆக பிரிக்கப்படுகிறது. அவற்றிற்கு மாதம் என்று பெயர். இது சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் சூரிய மாதம் என்றழைக்கப்படுகிறது.
சந்திர மாதம்
சந்திர மாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திர மாதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் தொடங்கி அடுத்த பௌர்ணமி வரையிலான காலமாக இருக்க, வேறு சில கணக்கீடுகளில் ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது. முஸ்லிம்கள் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சரியான சந்திர நாட்காட்டி ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகளின் முதன்மை விசயம். ஒவ்வொரு ஆண்டும் சூரிய நாட்காட்டி ஆண்டைவிட 11 நாட்கள் (லீப் வருடத்தில் 12 நாட்கள்) தள்ளிப்போவதும் ஆகும். சூரிய நாட்காட்டியுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும். சூரிய நாட்காட்டியில் குறிப்பிட்ட மாதம் குறிப்பிட்ட (குளிர், கோடை காலம்) காலநிலையை கொண்டிருக்கும்.ஆனால் சந்திர நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட காலநிலையை கொண்டிருக்காது. ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.
சூரியசந்திர நாட்காட்டிகள்
ஹிஜ்ரி நாட்காட்டியைத் தவிர்த்து அனைத்து சந்திர நாட்காட்டிகளும் உண்மையில் சூரியசந்திர நாட்காட்டிகள் ஆகும். அதாவது மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.
ஹிஜ்ரி வருடம்:
இஸ்லாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா,அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
இசுலாமிய மாதங்கள் பெயர்கள்
1. முஹர்ரம் محرّم
2. சஃபார் صفر
3. ரபியுல் அவ்வல் ربيع الأول
4. ரபியுல் ஆகிர் ربيع الآخر أو ربيع الثاني
5. ஜமாஅத்துல் அவ்வல் جمادى الاول
6. ஜமாஅத்துல் ஆகிர் جمادى الآخر أو جمادى الثاني
7. ரஜப் رجب
8. ஷhபான் شعبان
9. ரமழான் رمضان
10. ஷவ்வல் شوّال
11. துல் கஃதா ذو القعدة
12. துல் ஹஜ் ذو الحجة
இஸ்லாமிய நாட்காட்டிகளில் சூரியனின் மறைவின்போது நாள் துவங்குகிறது.
மாயா காலண்டர்
மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் வாழ்ந்த இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.
மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைகிறது.
மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள்.
சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை இப்போதைய எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.
சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…