ஹதீஸ் – அறிமுகம்.
ஹதீது என்ற சொல்லுக்கு அரபி அகராதி விளக்கம் செய்தி. இஸ்லாமிய பரிபாiஷயில் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றையும் .மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறை, தோற்றம், நபியவர்களின் தோழர்கள் சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் பயன்படுத்துவது வழக்கம்.
ஹதீஸ் குத்ஸி
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலவற்றை இறைவன் கூறியதாக சொல்லியிருக்கிறார்கள். இவ்விதத்தில் பதியப்பட்ட ஹதீதுகளுக்கு ஹதீது குத்ஸி என்று சொல்லப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ஹதீஸ் என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் அவற்றை நேரடியாகக் கேட்டும், பார்த்தும் நடைமுறைப்படுத்தினார்கள். அதை அடுத்த காலத்தில் தாபியீன்களுக்கு விளக்கப்படுத்தினார்கள். தாபியீன்கள் அவர்களுக்கு அடுத்த காலத்தில் வாழ்ந்த தபஉத் தாபியீன்களுக்கு கூறினார்கள்.
இவ்வாறு இந்த ஹதீதுகள் அடுத்தடுத்த காலங்களுக்கு பரவியது. இதில் சிலர்கள் தங்களுக்கு கிடைத்த ஹதீதுகளை தொகுத்து நூல் வடிவில் பதிந்தும் வைத்திருந்தார்கள். இதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாத கடமை என்பதாக நம்பிய மார்க்க அறிஞர்கள் மிகத்துரிதமாக செயலாற்றினர். இப்பணியில் அரபு மக்களுடன் அரபி அல்லாதவர்களும் கைகோர்த்தனர். அவர்கள் இப்பணிக்காகவே அரபி மொழியை கற்றார்கள். அதில் பாண்டியத்துவம் பெற்று மார்க்கத் தொண்டாற்றியுள்ளார்கள்..
இஸ்லாம் உலகலாவிய நிலையில் பரவிய போது ஹதீஸின் முக்கியத்துவத்தை விளங்கி பெரும் நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.
இவ்விதம் பெரும் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படுவது ஹிஜ்ரீ 100 லிருந்து ஆரம்பமாயிற்று.
1. முஅத்தா இமாம் மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) 92-179ஹிஜ்ரி
2. முஸ்னது இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு)-150-204ஹிஜ்ரி
3. முஸ்னது இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு)-164-241ஹிஜ்ரி
4. முஸ்னது இமாம் தவ்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)- 97-161ஹிஜ்ரி
5. முஸ்னது- இமாம் அவ்ஸஈ ரலியல்லாஹு அன்ஹு)- –157ஹிஜ்ரி
6. முஸ்னது இமாம் இப்னு முபாரக் ரலியல்லாஹு அன்ஹு)- -181ஹிஜ்ரி
7. முஸ்னது இமாம் முஹம்மதுபின் ஸலமா ரலியல்லாஹு அன்ஹு)- -167ஹிஜ்ரி
8. முஸ்னது இமாம் உஜன்னா ரலியல்லாஹு அன்ஹு)-107-198ஹிஜ்ரி
9. முஸ்னது இமாம் முஅம்மர் (ரலியல்லாஹு அன்ஹு) -191ஹிஜ்ரி
இந்நூல்களில் முஅத்தா மாலிக் போன்ற ஓரிரு நூல்களைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்னதுகளாக (தலைப்புகளின் அடிப்படையில்) அமைந்தன. ஹிஜ்ரீ 200 லிருந்து 300 வரையிலான காலத்தை ஹதீஸ் தொகுப்பின் பொற்காலம் எனலாம்.
இக்காலக்கட்டத்தில் பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள், 'ஸிஹாஹ் ஸித்தா' என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .
1. இமாம் புஹாரி(ரலியல்லாஹு அன்ஹு) 194 – 256 ஹிஜ்ரி
2. இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹு) 206 – 261 ஹிஜ்ரி
3. இமாம் நஸயீ (ரலியல்லாஹு அன்ஹு) 214 – 303 ஹி
4. இமாம் அபூதாவூத் (ரலியல்லாஹு அன்ஹு) 202 – 275 ஹிஜ்ரி
5. இமாம் திர்மிதீ (ரலியல்லாஹு அன்ஹு) 209 – 279 ஹிஜ்ரி
6. இமாம் இப்னுமாஜ்ஜா (ரலியல்லாஹு அன்ஹு) 202 – 273 ஹிஜ்ரி
ஹிஜ்ரீ 5-ம் நூற்றாண்டின் இறுதியில் அபுல்காஸிம் அலி இப்னு முஹம்மது இப்னு அஸாகிர் (ரலியல்லாஹு அன்ஹு) (இறப்பு 571ஹிஜ்ரி) என்ற ஹதீஸ்கலா வல்லுனர் அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற நான்கு நூல்களிலிருந்து ஹதீஸ்களை தேர்தெடுத்து ஒரே நூலாக 'அல்-அஷ்ராப் அலா மஃரிபத்துல் அத்ராஃப்' எனத் தொகுத்தார்கள்.
ஹதீஸ் திரட்டிய இமாம்கள் – நூல்கள் – வாழ்ந்த ஆணடு- திரட்டியவை
வ.எ |
இமாம்கள் |
ஹதீஸ் நூல்கள் |
வாழ்ந்த ஆணடு |
திரட்டியவை |
பதிந்தவை) |
01 |
இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரலியல்லாஹு அன்ஹு) |
ஸஹீஹூல் புஹாரி |
194-256 |
600,000 |
7563 |
02 |
முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரலியல்லாஹு அன்ஹு) |
ஸஹீஹ் முஸ்லிம் |
204-261 |
300,000 |
7563 |
03 |
இமாம் அபூ தாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ (ரலியல்லாஹு அன்ஹு) |
ஸூனனு அபீதாவூது |
202-275 |
500,000 |
5274 |
04 |
இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரலியல்லாஹு அன்ஹு) |
ஜாமிவுத் திர்மிதீ |
200-279 |
|
3956 |
05 |
இமாம் அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ (ரலியல்லாஹு அன்ஹு) |
ஸூனனுந் நஸாயீ |
215-303 |
|
5761 |
06 |
இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசிஇப்னு மாஜா (ரலியல்லாஹு அன்ஹு) |
இப்னு மாஜா |
209-273 |
|
4341 |
07 |
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரலியல்லாஹு அன்ஹு) |
முஸ்னது அஹ்மது |
164-241 |
1000000 |
27,999 |
அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னதுஅஹ்மது என்ற நூல்.
இவர்களை அடுத்து இமாம்கள்
தஹாவீ (ரலியல்லாஹு அன்ஹு),
தாரகுத்னீ (ரலியல்லாஹு அன்ஹு),
தப்ரானி (ரலியல்லாஹு அன்ஹு),
பைஹகி (ரலியல்லாஹு அன்ஹு),
ஹாக்கிம் (ரலியல்லாஹு அன்ஹு),
இப்னுஹிப்பான் (ரலியல்லாஹு அன்ஹு),
இப்னு குஸைமா (ரலியல்லாஹு அன்ஹு),
இப்னு அவானா (ரலியல்லாஹு அன்ஹு),
இப்னு ஜக்கன்(ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…