பேறுகால சாமான்கள் கொடுக்கும் வைபவம்
காயல் நகரில் பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் உள்ளது. எனவே பெண்கள் பிள்ளை உண்டானால், மாப்பிள்ளை வீட்டினரின் வீட்டிலிருந்து குழந்தை பிறந்தால் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பெண் வீட்டிற்கு கொடுத்தனுப்புவார்கள். இதில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பாட்டில், கிலுக்கு, விiயாட்டு சாமான்கள், கூடை, கொமன்ஞ்சான், குந்திரிக்கம், பால் மாவு, பிளாஸ்டிக் வட்டி, வாளி, ஜக்கு போன்ற சாமான்களுடன் இன்னபிற சாமான்களும் கொடுப்பார்கள். கொடுக்கும்முன் தங்கள் சொந்தபந்தங்களுக்கு சொல்லி அவர்களுக்கு காட்டிக் கொள்வார்கள். அதை கொடுப்பதற்கென்று ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். இந்த பேறுகால சாமான்கள் திருமணம் ஆகி முதல் பிள்ளை உண்டாகியவர்களுக்கே பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது.அதற்கடுத்த பிள்ளைகளுக்கு மாப்பிள்ளையின் செலவாகும்.
முதல் பிள்ளையாக இருப்பதால் பேறுகால செலவு மற்றும் பிள்ளைக்கு பெயர் வைக்கும் செலவு முழுவதும் பெண்ணின் வீட்டைச் சார்ந்தது. சில சமயம் மாப்பிள்ளை வீட்டார் செய்வார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…