பெயர் வைக்கும் வைபவம்
முதல் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவம் மிக சிறப்பாக செய்யப்படுகிறது. பெண் வீட்டாரின் செலவிலேயே இது செய்யப்படுகிறது. பெயர் வைக்கும் வைபவத்திற்கு பெண்வீட்டு சொந்த பந்தங்களையும், மாப்பிள்ளை வீட்டு சொந்தபந்தங்களையும் தெரிந்தவர்களையும் அழைத்து வைபவமாக எடுக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு பிஸ்கட், பூந்தி, லட்டு, ஹல்வா போன்ற இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு ஹஜ்ரத்மார்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டு அவர்கள் வந்ததும் வைபவம் ஆரம்பிக்கிறது. லுத்பில் இலாஹி, யா செய்யிதி, யாகுத்பா, சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் பைத்து, ஸதக்கத்துல்லா அப்பா பெயரில் மர்தியா இன்னும் இறைநேசச் செல்வர்கள் பேரில் மர்தியாக்கள் ஓதப்பட்டு முடிந்ததும் குழந்தை அலங்காரம் பண்ணப்பட்டு பெயர் வைக்கும் ஹஜ்ரத் முன்னிலையில் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் குழந்தையை தாய்மாமன்மார்கள்தான் வைத்திருப்பார்கள். அது இல்லாத பட்சத்தில் தகப்பனாரோ, சொந்தங்களோ வைத்திருப்பார்கள்.
ஹஜ்ரத் முதலில் முஹம்மத் என்ற பெயரை வைத்து விட்டு அதன்பின் இறைநேசச் செல்வர்கள் பெயர்களை பரக்கத்திற்காகவும், கார்மானத்திற்காகவும் வைப்பதாகக் கூறி விட்டு பிள்ளை வைக்கப்படும் பெயரை கூறி உன்னை அழைக்கப்படும் பெயராகிறது, உன்னை கூப்பிடும் பெயராகிறது, உன்னை துலங்கும் பெயராகிறது என்று சொல்லி வைக்கப்படும் பெயரை சொல்வார்கள். அதன்பின் சுப் ஹான மௌலிதில் உள்ள அல்ஹம்துலில்லாஹி அஃத்தானி என்ற பைத்தை ஓதி முடிப்பார்கள். இறுதியில் பாத்திஹா துஆவுடன் வைபவம் இனிதே நிறைவுறும்.
பெயர் வைத்த லெப்பைக்கும் வட்டா என்று ஒன்று அதற்குரிய கிண்ணத்தில் வைப்பார்கள். அதில் வெத்திலை, பாக்குடன் லெப்பைக்குரிய ஹதியாவும் இருக்கும். மற்ற ஹஜ்ரத்மார்களுக்கும் இதுபோல் கொடுக்கப்படுகிறது.
முதல் குழந்தை பிறந்ததும் ஆணாக இருப்பின் மாப்பிள்ளையின் தந்தையின் பெயரும், பெண்ணாக இருப்பின் தாயாரின் பெயரும் விடப்படுகிறது. இரண்டாவது குழந்தைக்கு பெண்ணின் தந்தை, தாயாரின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பம்போல் பெயர் வைக்கிறார்கள். ஒன்றிரண்டு இதில் விதிவிலக்கு உண்டு.
பிள்ளை வளர வளர சிலர் குழந்தை நல்ல அறிவுள்ளவனாக ஆகுவதற்கு 40 மொட்டைகள் வாரம்தோறும் புதன்கிழமை அடிக்கிறார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…