Home Uncategorized திருமணம் முடிந்தபின் பயணத்தின் வழக்கங்கள்

திருமணம் முடிந்தபின் பயணத்தின் வழக்கங்கள்

திருணம் முடிந்த மாப்பிள்ளை சம்பாதிப்பதற்கு வெளியூர் செல்வதென்றால் தன் தாயார் வீட்டிலிருந்துதான் பயணம் புறப்புடுவது வழக்கம். பெண் வீட்டிலிருந்து முற்கூட்டியே புறப்பட்டு தாயார் வீடு சென்று அங்கிருந்து பயணம் கிளம்புவார்கள். தான் சம்பாதித்ததை தன் தாயாருக்குத்தான் அனுப்பி வைப்பார்கள். அதிலிருந்து தன் மருமகளுக்கு மாத செலவிற்கு மாமியார் அவர்கள் கொடுப்பார்கள். வேறு ஏதேனும் தேவை ஏற்படின் மாமியாரிடமே மருமகள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பயணத்திலிருந்து திரும்பும்போது தனது தாயார் வீட்டில் இறங்குவதும் அங்கிருந்துதான் தன் பெண் வீட்டிற்குச் செல்வதும் இந்நகரின் வழக்கம்.

திருமணம் முடிந்த முதல் பயணமாக இருப்பின், மாப்பிள்ளை தன் தாயார் வீட்டில் வந்திறங்கியதும், அன்றி;ரவு பெண்ணின் தம்பி (மச்சினன்) ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்தி சென்று மாப்பிள்ளையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல செல்வார். அவருடன் மாப்பிள்ளையும் வருவார். அன்று அல்லது ஒரு சில நாள் கழித்து மாப்பிள்ளை வந்ததற்கு வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து பக்கத்து வீடுகளுக்கு கொடுப்பார்கள். மாப்பிள்ளை கொண்டு வந்த திண்பண்டங்களை சொந்தபந்தங்களுக்கு பகிர்வார்கள்.

இந்த நடைமுறை தற்போது ஒருசில இடங்களில்தான் இருக்கிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…