தயம்மும்
இச்சொல் சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல் என்ற பொருளைத் தரும். தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹு செய்வதற்கு இச் சொல் வழங்கப்படுகிறது. தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் குடிப்பதற்கு தேவைப் பட்டால் அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மும் செய்து கொள்ளலாம்.
நஜீஸ் இல்லாத சுத்தமான புழுதி கலந்த மண்ணினால் தயம்மும் செய்ய வேண்டும். செம்மண், காவி மண் போன்ற இயற்கை நிறத்தையும் தண்மைகளையும் கொண்ட மண்ணினால் தயம்மும் செய்வது கூடும்.
ஃபர்ளுகள்:
1. தயம்மும் உடைய பர்ளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்து கொண்டு தரையில் உள்ள மண்ணை உள்ளங்கையினால் ஒற்றி எடுத்து முகத்தை மஸ்ஹு செய்தல். மண்ணை எடுப்பதற்காக உள்ளங்கைகளைத் தரையில் பதித்ததிலிருந்து முகத்தை மஸ்ஹு செய்யும் வரை நிய்யத் நிலைத்திருக்க வேண்டும்.
2. முழங்கை வரை இரு கைகளையும் மஸ்ஹு செய்தல்.
3. முதலில் முகம், பிறகு கைகள் என வரிசைக் கிரமமாகச் செய்தல்.
4. இவ்விரண்டு உறுப்புகளுக்காக இருமுறை மண்ணை ஒற்றி எடுத்தல்.
சுன்னத்துகள்:
தயம்மும் தொடங்குமுன் அஊது ஓதுவதும், ஷஹாதத் கலிமா ஓதுவதும், பிஸ்மில்லாஹ் ஓதுவதும், சுன்னத் ஆகும். தயம்மும் செய்து முடித்தபின் உளுவின் துஆவை ஓதுவதும், முகத்தின் மேல்பகுதியிலிருந்து மஸ்ஹு செய்யத் தொடங்கி அதன் கீழ் பகுதியில் கொண்டு முடித்தலும், தரையில் இரண்டு உள்ளங்கைகளை அடித்த பின்பு புறங்கைகளை ஒன்றோடு ஒன்றாக அடித்து, கையில் ஒட்டி இருக்கும் மிதமிஞ்சிய மண்தூள்களை விழச் செய்வதும் ஸுன்னத் ஆகும்.
தயம்முமை முறிப்பவைகவள்:
உளுவை முறிக்கும் கருமங்கள் யாவும் தயம்முமையும் முறித்து விடும். அத்துடன் தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து தொழுபவர் தண்ணீரைப் பெற்றுக் கொண்டால் உடனே தயம்மும் முறிந்து விடும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…