ஜகாதுல் பித்ர் விபரம்
பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்:
பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது.
அளவு:
ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி 3 லிட்டர்கள் அல்லது 2 கிலோ 400 கிராம் கொடுப்பது கடமையாகும்.
ஷாபிஈ மத்ஹபில் உணவுப் பொருட்களைத்தான் கொடுக்க வேண்டும். அதன் விலையை கொடுத்தால் பித்றா நிறைவேறாது.தான் வசிக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு பித்றா கொடுப்பது கடமை. வேற்றூரிலுள்ள ஏழைகளுக்கும் பித்றா கொடுக்கலாம்.
கொடுக்கும் நேரம்:
பெருநாள் தொழுகைக்கு முன்பு பித்றா கொடுப்பது சுன்னத்தாகும். பின் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். எனினும், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டாரையும் எதிர்பார்த்து சூரியன் மறைவதற்குள்ளாக கொடுப்பது சுன்னத்தாகும்.
பெருநாள் அன்று சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது ஹறாமாகும். பித்றாவை ரமலான் முதல் பிறையிலிருந்தும் கொடுக்கலாம்
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…