ஜகாத் வழங்கக் கடமைபட்டவர்களிடம் இருக்க வேண்டிய நிதியின் அளவு
1. ஜகாத்து நிதி தங்கமாக இருந்தால், 85 கிராமுக்கு; குறையாத அளவு தங்கத்தை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
2. வெள்ளியாக இருந்தால் 595 கிராமுக்கு குறையாத அளவு வெள்ளியை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
3. ரூபாய் நோட்டுகளாக இருந்தால் 85 கிராம் தங்கத்தின் அன்றைய மார்க்கட் விலை என்ன? என்ற விபரத்தைத் தெரிந்து, அந்த விலைக்குக் குறையாத அளவு ரூபாயை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
4. ஜகாத்து நிதி வியாபாரப் பொருட்களாக இருந்தால், வியாபாரம் தொடங்கிய நாளிலிருந்து ஒருவருடம் நிறைவு பெற்றவுடன், வியாபாரப் பொருட்களின் விலைப்பட்டியல் தயாரிக்க ப்பட வேண்டும். அப்போது மொத்தப் பொருட்களின் விலைமதிப்பு 85 கிராம் தங்கத்தின் விலை மதிப்பை அடைந்து விட்டால் அந்தப் பொருட்களுக்காக ஜகாத்து கொடுப்பது அவசியம் ஆகும். வியாபாரப் பொருட்கள் ஒருவர், உரிமையாக்கிக் கொண்ட ஆரம்பகட்டத்தில் அவை 85 கிராம் தங்கத்தின் விலை மதிப்பை அடையாமலிருந்தாலும் சரியே, ஒரு வருடத்தின் முடீவில் அவை மேற்கண்ட விலை மதிப்பை அடைந்தால் அதற்கென ஜகாத்து கொடுப்பது அவசியம் ஆகும். வருடத்தின் இடைப்பட்ட நாட்களில் கிடைக்கும் இலாபங்களெல்லாம் மூலதனத்துடன் சேர்க்கப்பட்டு கணிக்கப்படும். எனவே, 25,000 ரூபாய் மூலதனத்துடன் ஒரு வியாபாரத்தை தொடங்கிய ஒருவருக்கு, மாதம் சராசரி 1500 ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்ததென்றால், வருட முடிவில் அவருடைய மொத்த இலாபமாகிய 18000 ரூபாயை 25000 ரூபாயுடன் சேர்த்துக் கூட்டும்போது வரும் 42000 ரூபாய் 85 கிராம் தங்கத்தின் விலையைவிட அதிகமானால் இத்தகையவர் ஜகாத்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்.
5. உணவாக அமைந்து, வழக்கமாக விரும்பி உண்ணப்படும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களாகவோ, பேரீச்சம் பழமாகவோ, ஜக்காத்துப் பொருட்கள் அமைந்திருந்தால்- அவை உமி, தோல் ஆகியவை நீக்கப்பட்டு சேமிக்கப்படுகிறதா? அல்லது உமி, தோல் ஆகியவை நீக்கப்படாமல் சேமிக்கப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். உமி, தோல் போன்றவை நீக்கப்பட்டு; சேமிக்கப்பட்டால் அந்தத் தானியம் 900 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். உமி, தோல் நீக்கப்படாமல் சேமிக்கப்பட்டால் அந்தத் தானியம் 1800 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். எனவே முதல்வகைத் தானியம் 900 லிட்டருக்குக் குறைவாக இருந்தாலோ 2-ம் வகைத் தானியம் 1800 லிட்டருக்குக் குறைவாக இருந்தாலோ அந்தத் தானியத்திலிருந்து ஜகாத் வழங்க வேண்டிய அவசியமில்லை.
6. ஜகாத் நிதி ஆடு, மாடு, போன்ற கால்நடையாக இருக்கும் போது, அவற்றிலிருந்து ஜகாத் வழங்குவது அவசியம் ஆக வேண்டுமானால் 40-க்கு குறையாத ஆடுகளையோ அல்லது 30-க்கு குறையாத மாடுகளையோ ஒருவர் பெற்றிருக்க வேண்டும். 40-க்கு குறைவான ஆடுகளைப் பெற்றிருப்பவர்களும், 30-க்கு குறைவான மாடுகளை வைத்திருப்பவர்களும் ஜகாத்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…