கட்-ஆப் மார்க் கணக்கிடுவது எப்படி?
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் தேவை.
இதில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், இயற்பியலிலும் வேதியியலிலும் எடுத்த மதிப்பெண்களை கூட்டி அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.
இப்போது கணக்கில் எடுத்த மதிப்பெண்ணையும் வேதியியல், இயற்பியலில் எடுத்த மார்க்கையும் கூட்டினால் வருவதுதான் கட்-ஆப் மார்க் ஆகும்.
உதாரணத்திற்கு, ஒரு மாணவர் கணக்கில் 190 எடுத்திருக்கிறார். இதை 2 ஆல் வகுக்கும்போது 95 கிடைக்கும். அவர் இயற்பியலில் 180-ம், வேதியியலில் 190-ம் எடுத்துள்ளார். இந்த இரண்டு மதிப்பெண்களையும் கூட்டி 4 ஆல் வகுத்தால் 92.5 கிடைக்கும். அவரது கட்-ஆப் மார்க் 200-க்கு 187.5 ஆகும்.
மருத்துவம், கால்நடை விவசாயம் ஆகிய மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள் என்றால் கணக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…