தேள்கடிக்கு
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் விரலில் தேள் ஒன்று கொட்டி விட்டது. எனவே தொழுகை முடிந்ததும், 'தேள் நபிமார்களையும் விடுவதில்லை. உம்மத்துக்களையும் விடுவதில்லை' என்று கூறிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் உப்பைக் கலந்து விரலை அந்தத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டு வலி நீங்கும் வரையில் ஸூரத்துல் இக்லாஸ், பலக், நாஸ் ஆகிய மூன்று ஸூராக்களை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
ஒவேறு ஒரு ரிவாயத்தில் தேள் கொட்டினால் ஏழு தடைவ ஸூரத்துல் பாத்திஹா ஓதவும் என்று அவர்கள் கூறியதாக காணப்படுகிறது.
'ஒரு சஹாபி நபி பெருமானிடம் வந்து தேள் கொட்டினால் அதற்கு மந்தரிக்கும் 'துஆ' தமக்குத் தெரியுமென்றார்.
بِسْمِ اللّٰهِ شَجَّةٌ قَرِيْنَةٌ مُلَحَّةٌ بَحْرٍ قَفْطًا
என்பதே அந்தத் துஆ என்றார். அதைக் கேட்டதும் பெருமானார், 'நீங்கள் அதைப் பல தடைவ ஓதி மற்றவர்களுக்கும் நன்மை பயக்கச் செய்யுங்கள்' என்று கூறிய ஹதீஸ் 'முஸ்தரக்' என்ற நூலில் காணப்படுகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…