Home Uncategorized முள்ளங்கி (Mooli)
Uncategorized - பொது - July 1, 2011

முள்ளங்கி (Mooli)

முள்ளங்கி தின்றவன் அதன் நாற்றம் வருமே எனப் பயந்தால் என்னை நினைத்துக் கொள்ளவும் என்றும், அப்போது என் மீது சலவாத்து ஓதட்டும் என்றும் நபிபெருமானார் கூறினார்கள். இந்ததீஸ் ஸபருஸ் ஸஆதாவில் காணப்படுகிறது.

முள்ளங்கியை உண்பதால் பசியும், போக சக்தியும் அதிகரிப்பதுடன், தொண்டை சம்பந்தமான வியாதிகள் குணமாகிக் குரலும் இனிமையாகிறது. மூத்திரக் காயில் உண்டாகும் கற்களை இது கரைக்கும் தன்மையுடையது. வெட்டை நோய்க்கும், மூத்திர அடைப்பை நீக்கும் மருந்தாகவும் உதவுகிறது. இதன் சட்னி வாயுவைக் கலைக்க உதவும். இது முகத்தின் நிறத்தைச் சிவப்பாக்கி, மயிர் உதிர்வதை நிறுத்தும். இதன் சூப்பு நரம்பு சுருள்களை அவிழ்க்க உதவும்.

கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பா்பரசும் அதிகம் காணப்படுவதால் தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்: பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…