இன்று எப்படி இருக்கிறது – காயலின் தலை மகனே! விழித்தெழு!
அன்புள்ள சகோதரர், சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூரின் நிலை தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா? அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவே உங்கள் முன் இந்த தலையங்கம்.
நமது பட்டணம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா???
தன் சகோதரன் ஒரு சொத்தை வாங்கிவிட்டான் என்றால் மனம் விட்டு புழுங்கும் உடன்பிறந்த மற்றொரு சகோதரன்!
லாத்தாவிற்;கு(மூத்த சகோதரிக்கு) சொத்தில் 10 அடி கூடுதலாக போய்விட்டால் ஒரு சுனாமியையே உருவாக்கும் உடன் பிறந்த தங்கை!!
தான் ஒரு முக்கியமான??!!! சீரியல் பார்க்கும் பொழுது மகன் கார்ட்டூன் சேனலை மாற்றிவிட்டால் இடியே விழுந்தது போல் அலரும் தாய்!!!
அரை அடிக்காக மூக்கை நாறவைக்கும் முடுக்கு சண்டைகள்! அதற்காக மட்டும் ஆயிரத்திற்;கும் மேற்பட்ட வழக்குகள்!
சகோதரனின் சொத்து, பொது சொத்து மட்டுமல்ல வக்ஃப் சொத்தையே முழுங்கி விட்டு செரியாமல் வல்ல அல்லாஹ்விற்;கும் வேறு காரணம் கூறும் அதிமேதாவிகள்!
வெட்டைகள்!! முன்னோர்களால் நல்ல விசயங்களுக்காக உருவாக்கப்பட்ட இடம் இன்று, கோள், குந்தானிகளுக்கும், டிவி சீரியல் கலந்துரையாடலுக்கும், பிரத்யோகமாக அரங்கேற்றம் நடத்தும் ஃபஸாது மடங்களாகி விட்டது!
ஒரு காலத்தில் உற்சாகமாக சமூக சேவைகளை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இடங்களெல்லாம் இப்பொழுது சடவு சங்கங்கள் அல்லது சீட்டாட்ட களங்களாகி விட்டது!
விபச்சாரத்தை விட கொடியது குழப்பம் விளைவிப்பதும், ஃபஸாது பேசுவதும், குறையை பற்றி உடையவனை தவிர மற்ற அனைவரிடமும் கண், காது, இன்னும் கொம்பும் வைத்து ஊரெல்லாம் தாரை, தப்பட்டையோடு பரப்பும் பிரச்சார பீரங்கிகள்.
மது, புகைகளில் சிக்கி மூழ்கி; மூச்சு திணறி கொண்டு திசை தெரியாமல் தடுமாறும் வாலிபக் கூட்டங்கள்!
இதற்கிடையில், நலிந்து மெலிந்து வற்றிப்போன, வறிய, சொல் பலமில்லாத ஆலிம்கள் சமுதாயம்! ஊருக்கு மட்டுமே உபதேசம் போலிக்கூட்டங்கள்?!
அனாதைகளின், விதவைகளின் சொத்துக்களை அநியாயமாய் அனுபவித்து இறைமுனிவுக்கு பயப்படாமல் திரியும் அற்பர்கள் ஒரு புறம்!
பாதிக்கப்பட்டோர்களின் மனக்கொதிப்புக்கு பயந்து கொள்ளுங்கள் என்ற நாயக வாக்கியத்தை செவியேற்காது பிறர் துன்பத்தில் இன்பம் காணும் நீசர்கள் இன்னொரு புறம்!
இன்னும் கவலை என்னும் மெகா சுனாமியில் சிக்கித்தவிக்கும் இன்னும் பல கூட்டங்களும் உண்டு! காயலின் கலை மகனே கேள்!
அங்கு இங்கு அலைந்து திரிந்து சிறிது காசு சேர்த்து கைக்கூலி கொடுத்தாவது மகளை மணமகளாக்க துடிக்கும் தாய்மார்கள் எத்தனை?
அப்படி துயரத்துக்கிடையிலும் மகளை கரையேற்றிவிட்டோம் என்று அமைதியுறும் நிலையில், அர்iஷ உலுக்கும் தலாக் என்ற பட்டத்துடன் அதே மகள் வயிற்றில் ஒரு சுமையுடன் தாயிடமே தஞ்சம் தேடும் விதவைகள் எத்தனை?
கல்யாண வைபவங்களுக்காக, தன் மகள் கல்யாணத்திற்;கு வாங்கிய பணத்திற்காக வட்டிக் கொடுத்து மூழ்கும் அந்த குடும்பங்கள் எத்தனை?!
அல்லாஹ்! அல்லாஹ்!
இப்படி மாறுபட்ட ஒரு பயங்கரமான மற்றும் ஒரு சோக உலகமே உள்ளது இந்த பட்டணத்தில். இன்னும் சொல்லவா காயலின் சாய்ந்து தோய்ந்து போன கௌரவத்தை? நிறுத்திக்கொள்வோம் இத்துடன்……எல்லாவற்றையுமே! எழுவதின் நோக்கம் குறைகளை மட்டும் சொல்வதில் இல்லை! அதற்;கு ஒரு தீர்வும் வேண்டும்! எங்கிருந்து தீர்வு வரும்? யார் அதை செய்வார்கள்?
காயலின் தலை மகனே! இந்த அவலங்களை கண்டும் காணாதது போல் உறங்கும் உள்ளங்களை இறைவன் சுனாமியை அனுப்பி எழுப்புமுன்னர், அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்ற ஆதரவை விட்டு முகத்தை இறைவனின் பக்கம் திருப்பி அவன் உதவியோடு நீ செய்!
உன்னிலிருந்து ஆரம்பமாகட்டும்! இறை சொல்லின்படி உன்னையும் உன் குடும்பத்தையும் நரகத்திலிருந்து காப்பாற்ற முதலில் உன் போராட்டத்தை துவங்கு! அதற்காக நீ எடுக்கும் ஆயுதம், நம் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மேலான பாதை , பணிவு என்னும் நற்குணமாக இருக்கட்டும்! அவர்களின் நிகரில்லா பொறுமை எனும் காலடிச் சுவற்றை பின் பற்றி சொர்க்கத்தை அடைந்து கொள்! பின் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடிக்கொள்! அதைத் தேட நீ எங்கும் செல்ல வேண்டாம்! அது உனக்கு மிக மிக அருகிலேயே உள்ளது! உன் தாயின் காலடியில் சுவர்க்கம், உன் தந்தையின் பொருத்தத்தில் இறை பொருத்தம்! எப்படி எளிதாக்கி விட்டான் அந்த ஏகன,; இந்த அஹ்மது நபிகளின் மார்க்கத்தை?
உன்னை அமுதூட்டி அணைத்து, உன் அசுத்தங்களை நீக்கி, பாதுகாத்து வளர்த்து ஆளாக்கியவளின் காலடியில் சுவர்க்கம்! நீ நன்றாக இருக்க வேண்டும், உன்னை வளர்க்க உன் அன்னை யாரிடமும் கையேந்தி விடக்கூடாது என்பதற்காக தன் இளைய வயதில் இன்பங்களை தியாகம் செய்து ஹலாலான உணவைத்தேடி தன் குடும்பத்தையே பிரிந்து சென்ற உன் தந்தையின் பொருத்தத்தில் ஆண்டவனின் பொருத்தம்! எவ்வளவு மகத்தான அருட்கொடை!! இந்த அருட்கொடைக்காக அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) க்கு விடாது நன்றி செலுத்திக்கொண்டே இரு! நீ இறையருளால் வென்று விடுவாய்!
பின் இந்த சமுதாயத்தின் பக்கம் திரும்பு! அச்சமயத்தில், எந்த நிலையிலும் மற்றவர்களை தாழ்வாக எண்ணிவிடாதே! அவர்களிடம் குறை இருப்பதை கண்டால், முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்து. உன்னிடம் அந்த குறை இல்லாததற்காக! பின் அதை அவர்களிடம் மட்டும் நயமாக எடுத்து கூறு! மறைவில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்! இறையுதவி கிடைக்கும்!
இந்த வாக்கியங்கள் எமதன்று! அது உன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால்…நீ முதலில் சமுதாயத்திற்;காக செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இருக்கிறது!
அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பது நமது மார்க்கத்தை சார்ந்ததல்ல! சொல்லால், செயலால் யாருக்கும் தீங்கு விளைவிக்காதவனே இறை நம்பிக்கையாளன் என்பது நபிச் சொல்!. சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.
நமது மார்க்கம் இப்படி இருக்க, அண்டை வீட்டார் நாற்றத்தால் அவதியுறும் வகையில் கண்ட இடங்களில் குப்பையை கொட்டி செல்லுவதுதான் நமது வழியோ? நீ செய்யவில்லை என்று சொல்வாய்! யார் செய்கிறாரோ அவரிடம் செல்! உன் மென்மையான சொல் கொண்டு அதை செய்ய விடாமல் செய்! உன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த குப்பைகளை அகற்ற ஒரு வழியை ஏற்படுத்து! அந்த வழி சுகந்தம் மலரும் வழியாகட்டும்! ஒரு வீடு என்றால் ஒரு பை குப்பை, 10 வீடுகள் சேர்ந்தால்? குப்பை மேடு….
செல்லும் பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவதும் தர்மம், நமது மார்க்கம் சொல்கிறது! அது சத்தியம்! இன்று ஊரில் ப்ளாஸ்டிக் பைகள், கப் மற்றும் அது போல் உள்ளவைகள் மறுசுழற்சி recycle செய்யமுடியாதவைகள், மேலும் பின் வரும் தலை முறைகள் அதனால் மிகவும் கஷ;டத்திற்குள்ளாவர்கள்! எனவேதான் அரசு அதை உபயோகிக்க தடை விதித்து இருக்கிறது. மார்க்கமும் அப்படியே தான் கூறுகிறது! நமது சமுதாயத்திற்;கு தீங்கு விளைவிக்கும் அது போன்ற பொருளை அகற்று! அதுவும் உன் வீட்டில் இருந்தே ஆரம்பமாகட்டும்!
இதற்காக உனக்கு நற்பெயர் கிடைத்தாலும் சரி, வம்பன் என்று உன்னை பட்டம் கட்டினாலும் சரி! தனிமையில் இதை கூறு. :
ரப்பீ இன்னீ மக்லூபுன் ஃபந்தஸிர்! என் இறைவனே உன் பக்கம் திரும்பிவிட்டேன் எனக்கு உதவி செய்!
வஜ்புர் கல்பியல் முங்கஸிர்! என் உடைந்து போன இதயத்தை நீ பொருத்தி விடு!
இன்னக மலீகின் முக்ததிர்! நிச்சயமாக நீ தான் சர்வ சக்தனான அழிவில்லா அரசன்!
வஸல்லி அலல் முக்தாரி மின் முழர்! என்று ஸலவாத்து கூறியவனாக துயில்கொள்!
ஸலாமுன் கவ்லுன் மின் ரப்பிர் ரஹீம்!
மறந்து விடாதே! உன்னைப் போல் 40 பேர் சேர்ந்தால் ஒரு சமூகம்!
அன்புடன்,
காயலின் வலைமகன்
kayalpatnam.in
அடுத்த வெளீயீட்டில் இன்ஷh அல்லாஹ்
குறைகளை சுட்டிக்காட்ட: [email protected]
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…