குடும்ப பட்டப் பெயர்கள்
அல்லாஹு சுபுஹான ஹுவத்தஆலா முதல் மனிதராம் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்கள் மூலம் அவர்களின் துணைவியான ஹஜ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தான். இவர்களின் மூலம் மனித வர்க்கத்தையே பல்கிப் பெருகச் செய்தான். மனிதர்கள் பல்கிப் பெருகியதும் பல்வேறு இனங்களாக, கோத்திரங்களாக, வமிசங்களாக தங்கள் நடைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் இன்னபிற காரணங்களால் பிரிந்தனர்.
அவர்கள் அவ்வாறு பிரிந்தபின் தங்களது இனம், கோத்திரம், குடும்பத்திற்கென்று பெயர்கள் வைத்துக் கொண்டார்கள். அவர்களை அந்தப் பெயர்களை வைத்துச் சொன்னால் தான் அவர்களின் அடையாளமே தெரிகிறது. அந்த அடிப்படையில் நமது நகரில் குடும்பங்கள் பல்வேறு பெயர்களால் பரவிக் கிடக்கின்றனர். அவர்களின் குடும்ப பட்டப்பெயர்களை வைத்து அவர்களை அழைத்தால்தான் அவர்களின் அடையாளமே தெரிகிறது.
அவ்வாறு நமது நகரில் புழங்கப்பட்ட குடும்பப் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் இப்பெயர்கள் காரணகாரியங்களுக்காக வைக்கப்பட்டதேயாகும். மோசமான பெயர்களைக் கொண்டும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை இங்கு தவிர்த்துள்ளோம்.
மௌலானா, (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச குடும்பத்தார்கள்)
நஹ்வி(நஹ்வி ஆலிம் அவர்கள் குடும்பத்தார்),
சாளை,
நெய்னார்,
கீழக்கரையார்,
அப்பாவீட்டு பிள்ளை(சதக்கத்துல்லாஹ் அப்பா வலி அவர்கள் வமிசாவழியினர்),
வாவு,
கத்தீபு,
குளம்(சதக்கத்துல்லாஹ் அப்பா வலி அவர்களின் மகள் ஜைனப் அவர்களின் வமிசாவழியினர்),
வெள்ள வேஷ்டி,
தல்,
பொக்கு,
அவூது பிள்ளை,
அ.பு.,
பல்லாக்கு,
கண்ணாடி ஆலிம்,
கே.வி.,
கம்பெனியார்,
பாளையம்(சதக்கத்துல்லாஹ் அப்பா வலி அவர்கள் வமிசாவழியினர்),,
தோல்சாப்பு,
ம.கு.,
ம.க.,
க.தி.,
சாகிபுலெப்பை,
எலுமிச்சை பழம்,
பிரபு(நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச குடும்பத்தார்கள்),
எவுனி,
நோனா,
பழம்பாக்கு,
கண்டியப்பா,
வாப்பாசாகிபு,
கே.வி,
எஸ்.ஓ.,
பனம்பழத்தார்,
அம்பலத்தார்,
சி லெ.,
வேனா,
வே.மு.,
வங்காளம்,
விளக்கு,
அத்திமரத்தார்,
ஊண்டி,
வட்டம்,
முட்டை,
சீதாபழம்,
சேட்,
சோல்ஜர்,
கான்ஸ்டபிள்,
பூச்சை,
தைக்காப்பா,
புல்லாலி,
தேங்காய்பால்,
ஓலை லெப்பை,
முத்துகெட்டி,
ஏரோபிளேன்,
ஹிட்லர்,
எம்கேடி,
ஏகேஎஸ்,
சோநா,
தம்பான்,
நெ.ச,
பாகவி ஆலிம்,
பாலப்பா, கீ அப்பா,
சாரப்பா,
வாழைக்காய்,
சிலோன் ஹவுஸ்,
48வீடு,
கான்பூரார்,
காரமணி,
பண்ணை,
கட்டிக்கறி,
பாட்டா,
கலீபா அப்பா.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…