மஜ்லிஸுல் மஹ்லரிய்யீன் உதயம்!!
காயல்பட்டணத்தில் அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் இயங்கி வருகின்ற நிறுவனமான மஹ்லறத்துல் காதிரிய்யாவின் சார்பாக நடைபெற்று வரும் மஹ்லறா அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று சென்ற மஹ்லரி'களின் சங்கமம் கடந்த 20-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று மஹ்லறாவில் முதல்வர் மௌலவி அல்ஹாஜ் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மஹ்லரிகள் சுமார் 100 பேர்வரை கலந்து கொண்டனர். காலையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆலிம்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையையும் அதற்கு மாற்றமான கொள்கையையும் விளக்கிப் பேசினர். லுஹருக்குப் பின் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஸருக்குப் பின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மஹ்லரிகள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் சங்கம் அமைத்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பரப்ப பாடுபடுவது என்றும், கேரளாவில் மஹ்லரிகள் சேர்ந்து சங்கம் அமைத்;து செயல்படுவதாகவும் அதற்கு சொந்தமாக கட்டிடம் வாங்கியிருப்பதாகவும் முதல்வர் அவர்கள் சொன்னார்கள். அதைப் போல் தமிழகத்தில் திறம்பட செயல்பட துவங்கப்படும் சங்கத்திற்கு 'மஜ்லிஸுல் மஹ்லரிய்யீன்' என்றும் பெயர் வைப்பது என்றும் இதற்கென்று தனியாக ஒரு இணையதளம் ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இறுதியில் சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாத்திஹா துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…