செய்திகள் - November 17, 2019

முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா

17/11/2019

மாபெரும் மீலாது மாநாடு காயல்பட்டணம் முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்தநாள் பெருவிழா

கௌதுல் ஆலம் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பிறந்த நாள் விழா

முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் ஏழாவது ஆண்டு விழா

மிக பிரமாண்டமாக சீரும் சிறப்பாக இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்தது

இந்த விழாவையொட்டி சிறார்களுக்கான பேச்சுப்போட்டி ஸலவாத் ஓதும் போட்டி நடத்தப்பட்டது இதில் மதரஸா மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் பங்கு பெற்றார்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் திக்ர் மஜ்லிஸ் சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் புர்தா மஜ்லிஸ் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கான உதவிகள் இந்த நிகழ்வின் வாயிலாக செய்யப்பட்டது

இரவு மார்க்கச் சொற்பொழிவு உலமாப் பெருமக்களால் நடத்தப்பட்டது

அனைத்து நிகழ்வுகளிலும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து பயன் அடைந்தார்கள்

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…