Home செய்திகள் 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
செய்திகள் - September 1, 2025

12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது

காயல்பட்டினம் மஹ்லறா அரபிக் கல்லூரியில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி பல நூறு ஆலிம்களை உருவாக்கியவரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் 33 ஆண்டுகள் இமாமாக பணியாற்றியவருமான, அல்ஹாஜுல் ஹரமைன், அல்முஹிப்பிர்ரஸுல், அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் ஸுஃபி ஹழ்ரத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும் மருமகனுமான அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாக்கவி காதிரி ஸுஃபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு கந்தூரி வைபவம் 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை சிறுநெய்னார் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுகள்:

அன்றைய தினம் அஸர் தொழுகைக்குப் பின் மாலை 5 மணிக்கு, மகான் அவர்களின் ரவ்ழா ஷரீபில் பூ அலங்காரம் மற்றும் போர்வை போர்த்தும் வைபவம் நடைபெற்றது.

ஞாயிறு பின்னேரம் மற்றும் திங்கள் இரவு வழமைபோல் புனித மௌலிது ஷரீபும், பின்னர் ஹழ்ரத் அவர்களின் வாழ்க்கை வரலாறு பயானும் இடம்பெற்றது.

அந்த பயான், அவர்களின் பிரதான கலீஃபாவும் மருமகனுமான செய்யிது ஸாதாத் அஷ்ஷெய்கு அல்ஹாஜ் பிரபு செய்யது முஹ்யித்தீன் ஆலிம் ஜலாலி ஸுஃபி காதிரி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

01.09.2025 திங்கட்கிழமை காலை சுப்ஹுத் தொழுகைக்குப் பின் ஸுஃபி மன்ஸிலில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.

✨ இந்நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று ஆன்மீக பலனடைந்தனர்.

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…