1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவாசல்கள் சங்கங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மௌலித் மஜ்லிஸ்களில் பங்கு பெறுவார்கள் பெண்கள் தைகாக்களில் சிறப்பாக சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்களும் புகழ் பாடல்கள் ரசூல் மாலை மஜ்லிஸ்களும் பங்கு பெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது
இந்த ஹிஜ்ரி வருடம் 1500 ஆவது பிறந்தநாள் நிகழ்வாக அமைந்துள்ளதால் மிகச் சிறப்பாக அணைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறதை காண முடிகின்றது.
இந்த மாதத்தில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு பொதுநல சங்கத்தின் சார்பாகவோ அல்லது இயக்கங்கள் சார்பாகவும் மீலாது விழாக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், சங்கங்கள், தெருக்கள், தனிப்பட்ட வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தோரணங்கள் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…