ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
17/11/2019
ஹிஜ்ரி 1441 ரபீஉல் அவ்வல் பிறை 19. காயல்பட்டணத்தில்
பல்வேறு இடங்களில் மகான்
ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் உரூஸ் முபாரக் தினமான இன்று அவர்களின் நினைவு கூறப்படுகின்ற மஜ்லிஸ்கள்
நடத்தப்பட்டன…
ஸாஹிப் தைக்காவில் காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்வில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மௌலிதை தொடர்ந்து சதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு , சலாஹுதீன் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு , சாமு சிஹாப்தீன் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியோர் தனது தந்தை ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு மீது புகழ்ந்துரைத்த காவியங்கள் ஓதப்பட்டது. இந்த நிகழ்வில் மகான் அவர்களின் நேரடி வாரிசுகள் அதிக அளவில் பங்கு பெற்று இருந்தார்கள்.
இரவு நடைபெற்ற ராத்திபு மஜ்லிஸிலும் மகான் அவர்களின் புகழ்மாலைகள் பாடப்பட்டன
முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் மீலாது பெருவிழாவில் சங்கைக்குரிய அல் ஹாஃபிழ் சதக்கத்துல்லாஹ் ஹைரி ஆலிம் அவர்களால் மகான் அவர்களின் நினைவு கூரப்பட்டது இந்த நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
மாதிஹ் ரசூல் குழுவினரால் மகான் அவர்களின் மௌலித் புகழ் பாடல்கள் மற்றும் ஸலவாத் மஜ்லிஸ் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு கண்ணியத்திற்குரிய யாசின் மௌலானா அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள்
முகம்மது முஹிய்யதீன் அகடமி மூலமாக நடத்தப்பட்ட மத்ஹு மஜ்லிஸில் அந்த அகடமி மாணவர்கள் மிகவும் சிறப்பாக அமைத்திருந்தனர் இந்த நிகழ்விற்கு கண்ணியத்திற்குரிய செய்குனா பிரபு செய்யது முஹிய்யதீன் ஆலிம் காதிரி ஸூபி அவர்கள் தலைமையேற்று நடத்தி துஆ ஸலவாத் உடன் நிறைவு செய்தார்கள்
ஜன்னத்துல் காதிரியா தைக்காவில் மக்தப் முஹ்யித்தீன் பெண்கள் பிரிவின் சார்பாக குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது இதை ஆறு ஹாஃபிழாக்கள் ஐந்து ஜுஸ் வீதம் மனனமாக ஓதினார்கள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள் இதில் வந்தவர்களும் ஹாஃபிலா களுடன் சேர்ந்து ஓதியது குறிப்பிடத்தக்கது
மஃபதுன் நிஸ்வான் தைக்காவில் இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மகான் அவர்களின் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டது
சித்தி ஃபாத்திமா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹா மகளிர் மன்றம் சார்பாக குத்பியா மன்ஜிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசூல் மாலை ஓதப்பட்டு மகான் அவர்களின் வரலாற்று குறிப்பு ஆலிமாக்களால் செல்லப்பட்டது இதில் அந்த அமைப்பின் 200 உறுப்பினர்கள் கலந்து பயன் பெற்றார்கள்
பொதுமக்களால் மகான் அவர்கள் மறைந்து வாழும் மரைக்கா பள்ளி சென்று அவர்களின் ஜியாரதும் நிறைவேற்றப்பட்டது
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…