Home பொது கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்
பொது - January 7, 2020

கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்

நமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல்ல வரலாறு…ஆதாரங்கள்‌… சுவடுகள்…பட்டயங்கள்… சான்றிதழ்கள்.,.

நல்ல முறையில் பராமரிக்கப்படும்
காட்டு மக்தூம் பள்ளி கல்வெட்டு
காயல்பட்டணம்

இன்றைய மக்கள் பயன்படுத்தும் நவீன சிடி , பென்டிரைவ், கூகுள்… அன்றைய மக்கள் உருவாக்கிய கல்வெட்டுகள் தகவல் பதிவு, பாதுகாப்பு மையங்கள்

எடை மிகுந்த பாறைகளை முறையான வசதி இல்லாத காலத்தில் எவ்வளவு தூரம் எடுத்து வந்து செதுக்கி கட்டிட வடிவிலோ , எழுத்து வடிவிலோ அதில் வரலாற்றை பதிந்துள்ளார்கள். அதை செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்

காலத்தை கடந்து பேசப்படும் அந்த மனிதர்களின் உழைப்பு திறமை எதற்காக அவற்றை செலவழித்தார்கள் … வேறு வேலை இல்லையா நேரம் போகவில்லையா…

அந்தக் கல் சுவடுகளை பாருங்கள் அதன் மதிப்பு உங்களுக்கு தெரியும்

ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எத்தனையோ கல்வெட்டுகள் வரலாற்றை நமக்கு காட்டுகின்றது அவர்கள் வாழ்ந்த பண்பாட்டை நமக்கு போதிக்கின்றது

தங்களது காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்கள்

எனவே பாரம்பரியமான கல்வெட்டுகள் கல் கட்டிடங்களை அப்புறப்படுத்தி விடாதீர்கள் முடிந்தால் பாதுகாருங்கள் இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்

காலத்தால் பேசப்பட வேண்டும் என நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு கட்டிடத்தை என்னைவிட வலிமை கொண்டவர் கேலி செய்து உடைத்து எறிந்து வேறு வடிவில் கட்டினால் என் மனம் எவ்வளவு கஷ்டப்படும்

எனவே உங்களால் முடிந்தால் உங்கள் தகுதிக்கு இன்னுமொரு கலையை திறமையாக நவீன முறையில் கலைநயத்துடன் உருவாக்கி இந்த காலத்து நாகரிகத்தை வரலாற்றில் பதிவு செய்யலாம் அது நூற்றாண்டுகள் கழித்து பிற்காலத்திற்கு எடுத்துரைக்கும்

வரலாற்றை நமது காலத்தில் அழிந்துபோக விடாமல் பிற்காலத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் இதை செய்தால் நாமும் வரலாற்றில் இடம் பெறுவோம்

-காதிரி,காஹிரி.

காயல்பட்டிணம் மகுதூம் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு பள்ளி குளக்கரை கல்வெட்டுகள்
கல்வெட்டு எண்:2

 1. பு மருவிய திருமடந்தெயுடனே புவிமடந்தெயும் புயத்திருப்ப
 2. நாமருவிய கலைமடந்தெயும் நலம் சிறக்கும் சயமடந்தெயும் கோ
 3. ளார்ந்த……… வாளார்ந்த திறம் பெறுக……………
 4. முவகைத் தமிழும் முறமையின் விளங்க ……
 5. …………….. வேள்வியும்
 6. செய்வினை விற்ற …………… திரிபுவனமுழு தும் யுடையானென்
 7. ……….னா……….. ஒரு கு-
 8. ஐட நிழற் கிழத் தலமுழுதும் …….. பயச் …..வுள்ளத்
 9. து………மனுநெறி வளர்த்து……….மன்னு
 10. யிர்க்கெலாம்……..தாயெப் போல…….வாசற்
 11. புறந்து………… நன்நிலப்…….. வாகை
 12. ……….உரிமையில் ……….வீர
 13. பாண்டிய மன்னரும் ……….வெண்கண்
 14. …………….முடி சூட்டி……….. யருளிய…..நதி தீரத்தில்
 15. வ……கெல் ……….ள்ள……… கொற்கைக்கும்….
 16. …………….குத்துக்கல்லுக்கு தெற்கும் ………….தென் எல்கை
 17. பாண்டியப் பட்டினத்து………..குடிக்பற்றுக்கும் குளத்துக்கும்
 18. …….. இன்னான் கெல்லை பவுத்ர மாணிக்க
 19. நல்லூரில் காயற் துறையில் உடையார்…விட்ட
 20. தென்வாரி……… குளத்துப் பரிம்புக்………….ஆ
 21. ……………
 22. …………வீரபாண்டிய நல்லூர் (க்கு) …….. கீழெல்
 23. கை……. ஒன்பது ……….யின் முந்திரியின்…..கடம
 24. குளத்துக் கெதிராக …………..ஆக இன்னான் கெல்லை
 25. யும்படுத்து சோனவப் பிள்ளார்ப் பள்ளிக் ……. குடை
 26. …உள்ள பற்றுகள்…… குள்
 27. ……………….ஆன்…… குடி காலுக்கு
 28. …………நயினார்
 29. முக்காணி நீங்கலாக பெருவழி ……இக்குளத்தில்
 30. நீர் நக்கலும்…… புறமான…..பற்றும்…..துக்கும்
 31. சிலாக்…….. புஞ்சை நஞ்சை …. மு ாமர
 32. வடைகள்…… அளவுக்கு ……முப்பதாவது பா
 33. சனமுதலுக்கெ………… இவ்வோலை பிழபாடாக கொண்
 34. டு கையாண்டு….. கல்லிலும் செம்பிலும் வெட் ……
 35. டீ தாழ்வற நடத்திப் போதவு ……… துடையான் எழுத்து
 36. திவ்யம்………… தென்னவனெ…….ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…