தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹு வலி வலி ரலியல்லாஹு அன்ஹு
காயல் தந்த ஞான மாமேதை தைக்கா ஸாஹியு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வராக ஆமீனா அம்மையார் அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1242 ல் பிறந்தார்கள். தங்கள் தந்தையிடமே குர்ஆன், ஆன்மீகம்,மார்க்க கல்விகளைக் கற்று அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். மஹ்லறா மௌலானா அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதம கலீபாக (கலீபத்துல் குலபாவாக)வும் திகழ்ந்து,காதிரிய்யா தரீகை உலகமெங்கும் பரப்பினார்கள். செய்யிதலி பாத்திமா என்ற நங்கையை திருமணம் முடித்தார்கள். இவர்களுக்கு உமர் அப்துல் காதிர், அப்துல் காதிர் நெய்னா, செய்யிது உமர் ஆமினா ஆகிய மக்கள் பிறந்தனர். பல்வேறு கராமத்துகளை நிகழ்த்திய அப்பா அவர்கள் ஹிஜ்ரி1323 ஆம் ஆண்டு ஸபர் மாதம் 6 புதன் கிழமை கர்நாடகா மாநிலம் பட்கல் நகரில் மறைந்தார்கள். அவர்களின் அடக்கவிடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு ஜியாரத் நடைபெற்று வருகிறது. அவர்களின் கந்தூரி வைபவம் காயல்பட்டணம் முஹ்யித்தீன் பள்ளியில் பிரதி வருடம் ஸபர் பிறை 5 அன்று நடைபெற்று வருகிறது. கந்தூரி வழாவிற்கென்று சென்னையில் கட்டிடம் ஒன்று வக்பு செய்யப்பட்டுள்ளது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…