முகர்ரம் மாத நிகழ்ச்சிகள்
முஹர்ரம் மாதம் (ஹஸன் ஹுஸைனார் மாதம்)
பிறை 1- இஸ்லாமிய புதுவருடப் பிறப்பு.
பிறை 1- கோமான் தெருவில் பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மது சாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு கொடியேற்றம்.
பிறை 1- ஊரில் எல்லாப் பள்ளி மற்றும் பெண்கள் தைக்காக்களில் இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் புனித மௌலிது ஷரீஃப் ஓதுதல்.
பிறை 6- இந்த நாளில் வீட்டிற்காக வேண்டி புதிதாக சாமான்கள் மற்றும் தங்கம் வாங்கப்படும்.
பிறை 6 -காயல்பட்டணம் மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தவப்புதல்வர் முஹம்மது லெப்பை அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு பெண்கள் தைக்காவில் அன்னாரின் மௌலிது ஓதுதல். பாளையங்கோட்டையில் அன்னாரின் மறைவிடத்தில் கந்தூரி நடைபெறும்.
பிறை 9- ஆஷுரா நோன்பு பிடித்தல். பிறை 9,10 அல்லது 10,11 ல் நோன்பு பிடித்தல்.
பிறை 10-பெரிய சதுக்கையில் இமாம்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி தினம்.
பிறை 10- ஆஷுரா தினம்.
பிறை 14 -பெரிய முத்துவாப்பா ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 29/30- (நிறை பிறை) தைக்கா சாஹிபு ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு மாலை கொடியேற்றம் தைக்கா தெருவில் நடைபெறும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…