ஊர் எல்கை அமைப்பு:
இந்நகரை உருவாக்கியவர்கள் மிகவும் திட்டமிட்டு ஊரை வடிவமைத்துள்ளனர். இங்குள்ள அமைப்பைப் பொறுத்து நிர்வாகத்திற்காக ஊர் எல்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் திருமணப்பதிவு, பிரச்சனைகளுக்குத் தீர்வு மற்றும் அடையாளப்படுத்துவதற்காகவும் இவ்வெல்கைகள் உதவுகின்றன.
ஜமாஅத் மற்றும் முஹல்லா:
எந்த முஸ்லிம் ஊர்களிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் காயல்பட்டினத்திற்கு உண்டு. அது என்னவென்றால், ஊரை ஜமாஅத் வாசிகள் என்றும், முஹல்லாவாசிகள் என்றும் பிரிக்கிறார்கள். ஜமாஅத்வாசிகள் என்றால், அந்தந்த பள்ளிகளில் தொழுது அங்குள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குபெறும் ஒருவர் ஜமாஅத் வாசியாக ஆகிறார். ஒரு தெருவாஷில் இரண்டு அல்லது மூன்று பள்ளிவாயில்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் புழங்கும் பள்ளிவாயிலில் மட்டுமே ஜமாஅத்தாராக கணக்கெடுக்கப்படுவார்.
ஊரில் திருமணம் செய்து பெண்வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் பழக்கம் உள்ளதால், பெண்வீட்டின் அருகிலுள்ள பள்ளிவாயில்களில் ஜமாஅத்தாராகவும், தன்னுடைய பாரம்பரிய பள்ளியில் முஹல்லாவாசியாகவும் ஆகிறார். மேலும் மையவாடிகள் ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இருப்பதால் அந்த மையவாடிகளில் அடங்க உரிமை பெற்றவர்கள் முஹல்லா வாசிகள் ஆகிறார்கள். வேறொரு ஜமாஅத்தைச் சார்ந்த ஒருவர் தான் சாராத ஜமாஅத் உள்ள பள்ளிவாயிலில் முஹல்லாவாசி என்ற அடிப்படையில் மையவாடியில் அடங்க உரிமை பெற்றவர் ஆகிறார். மையவாடியில் அடங்க பெற்ற உரிமையானது பாரம்பரியமாக இருந்து வரும் ஒன்று.
மையவாடியில் அடங்க உரிமை பெற்ற முஹல்லாவாசிகளிடம் குறிப்பாக ஆண்களில் திருமணமானவர்களிடம் தமாம் பணம் என்று வரிப் பணம் நோன்பு காலங்களில் வசூலிப்பது உண்டு. நோன்பு பிறை 29 அன்று அந்தப் பள்ளிகளில் குர்ஆன் தமாம் செய்து அந்த மையவாடியில் அடங்கப்பட்டிருப்பவர்களுக்கு ஈசால் தவாபு செய்யப்படுகிறது. அன்று சஹருக்கு முஹல்லாவாசிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு தமாம் சாப்பாடு என்று பெயர்.
மிகப் பெரும்பான்மையாக மையவாடிகள் உள்ள பள்ளியில் மட்டும் நோன்பிற்கு ஊற்றுகஞ்சி என்று நோன்பாளிகளுக்கு கஞ்சி ஊற்றுவார்கள். நோன்பு திறக்க குடிப்பதற்கு கஞ்சி அனைத்துப் பள்ளிகளிலும் உண்டு. ஒரு சில பள்ளிகள் தங்கள் வருமானத்தைக் கணக்கில் கொண்டு இந்த நடைமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளன.
திருமணப் பதிவு (தஃப்தர்) எல்கை:
காயல்பட்டணத்தில் நடைபெறும் திருமணங்களை மூன்று பழமையான பள்ளிவாயில்களில் உள்ள ஏட்டில் பதிந்து வைக்கப்படுகிறது. இதற்காக எல்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சதுக்கைத் தெரு காழி அலாவுத்தீன் ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீபை மையமாக வைத்து(சென்ட்டரல் ஹவுஸ் வீட்டின் இரு வீட்டிற்கும் மத்திபமாக) ஊர் எல்கை பிரிக்கப்படுகிறது.
காழி அலாவுத்தீன் அப்பா தர்ஹாவிற்கு வடக்குப்புறமாக உள்ள பெண்வீட்டார்கள் குத்பா சிறுபள்ளியின் கதீபின் கட்டுப்பாட்டிலுள்ள தப்தருக்கும், தென்பகுதி குத்பா பெரிய பள்ளியின் கதீபின் கட்டுப்பாட்டிலுள்ள தப்தருக்கும் உரித்தாவார்கள். இவ்வெல்லை குறுக்குத்தெரு, குத்துக்கல் தெரு வரையும், கிழக்கு முழுவதும் மத்திய காயல் முழுவதும் பொருந்தும்.
மொகுதூம் பள்ளியின் கட்டுப்பாட்டிலுள்ள தப்தருக்கு கட்டுப்படுபவர்கள் காழியார் முஹல்லா என்றழைக்கப்படுகிறார்கள். காழியார் முஹல்லா தப்தர் என்று இதற்கு பெயர். இது மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெண் வீட்டிற்கு பொருந்தும்.
மக்கள் பேச்சுவழக்கில் உள்ள எல்கை:
காயல்மாநகரை அந்த ஊர் மக்கள் மூன்று பகுதியாக பிரித்துள்ளார்கள். அவை மத்தியகாயல், மேற்கு பகுதி, கிழக்குப் பகுதி ஆகியவையாகும்.
மத்திய காயல் என்பது சதுக்கைத் தெரு, குத்துக்கல் தெரு, நெய்னார் தெரு, அம்பலமரைக்கார் தெரு, குறுக்குத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு ஆகியவையாகும்.
கிழக்குப் பகுதி என்பது சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, தீவுத் தெரு, அப்பா பள்ளி தெரு, மரைக்கார் பள்ளி தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, அலியார் தெரு ஆகியவையாகும்.
மேற்குப் பகுதி என்பவை மொகுதூம் தெரு, தைக்காத் தெரு, காட்டுத் தைக்காத் தெரு, ஹாஜியப்பா தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு ஆகியவையாகும்.
நகராட்சி எல்கை:
வடக்கே காட்டு மொகுதூம் பள்ளியும் தைக்காபுரம், கிழக்கே கடற்கரையும், மங்களவாடி, தெற்கே கோமான் தெரு, அருணாசலபுரம் மற்றும் கடையக்குடி(கொம்புத்துறை)யும், பைபாஸ ரோட்டுப் பகுதியில் சாகுபுரம் என்கின்ற தாரங்கதாரா கெமிக்கல் வரையும் எல்கைகளாக உள்ளன.
ஆசாரிமார்கள் வடக்கே உச்சிமாகாளி அம்மன் கோயில் தெருவிலும், தெற்கே குத்துக்கல் தெருவிற்கு அருகாமையிலும் வசிக்கிறார்கள். அருந்ததியர்கள் என்னும துப்புரவுத் தொழிலாளர்கள் வீர சடச்சி அம்மன் கோயில் தெருவிலும், தேவர்மார்கள் சேதுராஜா தெருவிலும் வசிக்கிறார்கள். மீனவர்கள் கடற்கரை அருகே கடையக்குடி, கற்புடையார் வட்டம் பகுதிகளில் வசிக்கிறார்கள். நாடார்கள் ஓடக்கரை, தைக்காபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கிறார்கள். மங்களவாடி, ரத்தினபுரி, அருணாசலபுரம் போன்ற பகுதிகளில் கட்டிடத் தொழிலாளர்களும் வசிக்கிறார்கள்.
மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன.
வார்டுகள் |
தெரு பெயர்கள் |
1 |
கடையக்குடி |
1 |
அருணாசலபுரம் முதல் கொம்புத்துறை |
1 |
அருணாசலபுரம் ஆதி திராவிடர் காலனி |
1 |
கோமான் கீழத் தெரு |
1 |
கோமான் நடுத்தெரு |
1 |
கோமான் மேலத் தெரு |
2 |
சதுக்கைத் தெரு |
3 |
நெய்னார் தெரு |
3
|
கீழ நெய்னார் தெரு |
4 |
சதுக்கைத் தெரு |
4 |
குத்துக்கல் தெரு |
4 |
குறுக்குத் தெரு |
5 |
கி.மு.கச்சேரி தெரு |
5 |
ஆறாம்பள்ளி தெரு |
5 |
மொஹிதீன் தெரு |
5 |
மொகுதூம் தெரு |
6 |
சித்தன் தெரு |
6 |
ஆசாத் தெரு |
6 |
அம்பலமரைக்கார் தெரு |
7 |
கீழ நெய்னார் தெரு |
7 |
தீவுத்(பண்டகசாலை காரனார்) தெரு |
7 |
கற்புடையார் பள்ளி வட்டம் |
8 |
முத்துவாப்பா தைக்கா தெரு |
8 |
பண்டகசாலை தெரு |
8 |
கொச்சியார் தெரு |
8 |
தேங்காய் பண்டகசாலை தெரு |
8 |
சொளுக்கார் தெரு |
9 |
கடற்கரை(மரைக்கார்) தெரு |
9 |
அப்பா பள்ளி தெரு |
10 |
பரிமார் தெரு |
10 |
அலியார் தெரு |
10 |
சின்ன நெசவு தெரு |
10 |
காயிதே மில்லத் நகர் |
10 |
திருச்செந்தூர் ரோடு |
10 |
காயிதே மில்லத் நகர் முதல் தெரு |
11 |
கருத்த தம்பி மரைக்கார் தெரு(கே.டி.எம். தெரு) |
11 |
பெரிய நெசவு தெரு |
12 |
மங்களவாடி |
12 |
ஓடக்கரை |
12 |
ஓடக்கரை வடக்கு தெரு |
12 |
தைக்கா புரம் |
12 |
பூந்தோட்டம், |
12 |
கண்டிபிச்சைத் தோட்டம் |
12 |
வாணியக்குடி தெரு |
12 |
மேல நெசவு தெரு |
12 |
வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு |
13 |
வீரசடச்சி அம்மன் கோயில் தெரு |
13 |
விசாலாட்சிஅம்மன் கோயில் தெரு |
13 |
வண்ணார்குடி தெரு |
13 |
மொகுதூம் அலாவுத்தீன் தோட்டம் |
13 |
வண்ணார்குடி கடை தெரு |
13 |
ஹாஜியப்பா தைக்கா தெரு |
13 |
ஹாஜியப்பா தைக்கா தெரு |
14 |
கீழ லெட்சுமிபுரம் |
14 |
லெட்சுமிபுரம் |
14 |
அழகாபுரி |
14 |
அழகாபுரி தெற்கு தெரு |
14 |
எல்.எப்.ரோடு 1 |
14 |
ரத்தனாபுரி |
14 |
பாஸ் நகர் |
15 |
சீதக்காதி நகர் |
15 |
மங்களவிநாயகர் கோயில் தெரு |
15 |
பைபாஸ் ரோடு |
15 |
உச்சிமாககாளி அம்மன் கோயில் தெரு |
15 |
சிவன் கோயில் தெரு |
16 |
மருத்துவர் தெரு |
16 |
தைக்கா தெரு |
16 |
புதுக்கடைத் தெரு |
17 |
குத்துக்கல் தெரு |
17 |
காட்டுத் தைக்கா தெரு |
18 |
முத்தாரம்மன் கோயில் தெரு |
18 |
குளம் சாகிபுதம்பி தோட்டம் |
18 |
சேதுராஜா தெரு |
18 |
கோமான் புதூர் |
18 |
குருசடி1 |
18 |
குருசடி2 |
18 |
கொட்டமடக்கி |
18 |
ஆலம் விரிவாக்கம் |
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…