Home Uncategorized மொகுதூம் பள்ளி

மொகுதூம் பள்ளி

 

    சுமார் 1200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி. ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி அவர்களின்பாட்டனார் அவர்கள் இப் பள்ளியைக் கட்டியதாக தெரிகிறது. இப் பள்ளி மையவாடியில் 12000 க்கும் மேலான இறைநேசர்கள் அடங்கியுள்ளனர் என்று தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறியுள்ளனர்.
இப் பள்ளியில் காழியார் முஹல்லா நிகாஹ் தஃப்தர் உள்ளது.

1. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் பெயரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

2 ரபீயுல் அவ்வல்; பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

3. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

4. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில்  மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

.
5. ஷஃபான் பிறை 15 அன்று 3 யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ ஓதுதல்.

6.  ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக்குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.

11. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை தொழவைத்து குத்பா பேருரை நிகழ்த்தப்பெறும்.  முஸ்லிம்களுக்கான மையவாடி உள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…