Home Uncategorized கந்தூரி நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகள்

கந்தூரி நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகள்

ஊரில் பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று கந்தூரி நமதூரில் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. அதற்கு என்று நடைமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள்.
1.    கந்தூரி நாள் நெருங்கியதும் கந்தூரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கூட்டம் கூடி கந்தூரி கமிட்டி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
2.    அதன்பிறகு கந்தூரி பற்றிய விஷயங்களுடன் நோட்டீஸ் அடிக்கப்படுகிறது. அதில் கந்தூரி கமிட்டியினரின் பெயரும், பணம்அனுப்ப வேண்டிய நபரின் பெயர், முகவரியும் இடம் பெற்றிருக்கும்.
3.    இந்த நோட்டீஸ்களை வெளியூரில் இருக்கும் அந்த ஜமாஅத், முஹல்லா மற்றும் முஹிப்பீன்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அந்தந்த ஊர்களிலிருந்து தங்களால் இயன்ற தொகையினை கந்தூரிக்காக அனுப்பிக் கொடுக்கிறார்கள். சிலர் தங்கள் பகுதிகளில் வசூலித்து அனுப்பிக் கொடுக்கிறார்கள்.
4.    வீடுகளில் இருக்கும் வீட்டு உண்டியல்களை பெற்று அதற்கு ரசீது கொடுப்பதற்கென்று ஆளை நியமித்து அவர்களுக்கு கமிஷன் வகையில் தொகை பேசி உண்டியல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு அதன்மூலம் பணம் பெறப்படுகிறது. அதற்கென்று கந்தூரி அன்றோ அல்லது அடுத்த நாளோ நேர்ச்சை சோறு வழங்கப்படுகிறது.
5.    கந்தூரிக்காக உள்ளுர் வசூல் பிரிப்பதற்கு ஒரு நோட்டில் விபரங்களை எழுதி பெரியவர்கள் சிலர் சேர்ந்து வசூலிக்க செல்கிறார்கள். சென்றவருடம் கொடுத்தவர்களின் பட்டியலுடன் செல்கிறார்கள். புதிதானவர்களிடமும் வசூலிக்கிறார்கள்.
6.    கந்தூரி பிறை பிறந்ததும் அதற்காக புனித கொடியேற்றப்படுகிறது. தர்காக்களுக்கு வெள்ளை, பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.
7.    அடுத்து கந்தூரி அன்றோ அல்லது அடுத்த நாளோ போடப்படும் நார்ஷாக்கும், கத்முல் குர்ஆன் ஓதும்போது கொடுக்கப்படும் தேநீருக்கும்,  சோறு ஆக்குவதற்கென்று சமையல் காரர் மற்றும் (கந்தூரி அன்று செய்யப்படும் வேலைகள் உட்பட) கூலியாட்கள் கூலி பேசப்பட்டு அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது.
8.    மைக் செட், ரேடியோ, டியூப்லைட் போன்றவை போடுவதற்கு ரேடியோ செட்காரர்களுக்கு தொகை பேசி அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது.
9.    நார்ஷாக்கள் (பயான் மற்றும் கத்முல் குர்ஆன் ஓதுவதற்கு) முடிவு செய்யப்பட்டு அதற்கு அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது. காலையில் ஓதப்படும் கத்முல் குர்ஆனிற்கு சுமார் 5 கத்தம் ஓதுவதற்கும் பெரிய  கந்தூரி எனில் அதற்கு மேல் கத்தம் ஓதுவதற்கும், இரவு பயான் செய்வதற்கு நார்ஷா சுமார் 350 பேருக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
10.    சோறு ஆக்குவதற்கு என்று பஞ்சாயத்து போர்டுக்கு வண்டி தண்ணீருக்கு முற்கூட்டியே கடிதம் எழுதிக் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
11.    குறித்த நாளில குறிப்பிட்ட தலைப்பில் பயான் செய்வதற்கென்று ஆலிம்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு அதன்பின் அதை நோட்டீஸாக வெளியிடப்படுகிறது. சிறிய (மூன்று நாள் விசேசங்களுக்கு) நோட்டீஸ் அடிக்கப்படுவதில்லை.
12.    கந்தூரி முடிந்ததும் தர்காக்களின் உண்டியல்கள் மற்றும் கந்தூரி அன்று வைக்கப்பட்டிருக்கும் ஆண் பகுதி, பெண் பகுதி உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருக்கும் காணிக்கைகள் கந்தூரி செலவிற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமாகும் தொகைகள் சேர்த்து வைக்கப்பட்டு அடுத்த கந்தூரிக்கு பயன்படுத்தப்படுகிறது. தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் காணிக்கையாக இருப்பின் அது ஏலம் விடப்படுகிறது. அதுபோல் நேர்ச்சையாக வரும் ஆடு, கோழி போன்ற பிராணிகள் ஏலம் விடப்பட்டு  அந்த தொகைகள் கந்தூரி செலவினங்களுக்காக சேர்க்கப்படுகிறது.
13.    கந்தூரி அன்று வைக்கப்படும் உண்டியல்களில் பெரியவர்கள் உட்கார வைக்கப்படுகிறார்கள். கந்தூரி திக்ரு நடத்துவதற்கும் ஒருவருக்கு முற்கூட்டியே ஒருவருக்கு சொல்லப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. மாலையில் ஓதப்படும் மௌலிதுக்கும் தேநீர், சர்பத், காவா, பூஸ்ட் போன்றவற்றில் ஒன்று கொடுக்கப்படுகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…