நோய் நொடிகள் நீங்கிட
ஊரில் காலரா, பிளேக் போன்ற நோய், நொம்பலங்கள், துன்பங்கள் அதிகரித்து விட்டால் ஊரின் நான்கு மூலை சந்துகளில் கூடியிருந்து புனித புகாரி ஷரீஃப் கிரந்தத்தை ஓதுவார்கள். அடுத்து காவலாய் நிற்கும் வல்லோன் என்ற பைத்தையும், ஏனைய பைத்துகள், கஸீதாக்களை உருக்கமாக படித்தும், உருக்கமாக துஆ பிரார்த்தனை கேட்டும், சதக்கா (தர்மம்) கொடுத்தும் சில நாட்கள் மஜ்லிஸை நடத்துவார்கள்.
இதன்பயனாக ஊரில் பிரச்சனைகள் தீர்ந்து, நோய் நொம்பலங்கள் இல்லாமலாகிவிடும். இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மையாகும்.
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங…

