Home Uncategorized ஜும்ஆ
Uncategorized - பொது - March 21, 2011

ஜும்ஆ

ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமை-நோயாளி, குழந்தைஈ பெண் நீங்கலாக பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். (நூல் : அபூதாவூத்)
ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விசேஷமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத் தொழுகைக்கு உள்ளன.

1. குறைந்த பட்சம் ஜும்ஆவின் முதல் ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும்.2. ளுஹர் தொழுகையின் வக்துக்குள் ஜும்ஆவும் அதன் குத்பாவும் நிறைவு செய்யப்பட வேண்டும்.

3. 'ஜும்ஆ' தொழும் அதே ஊரைச் சேர்ந்த உள்ளுர் வாசிகளான பருவம் அடைந்த, நாற்பது ஆண்கள் தொழுகையிலும், குத்பாவிலும் தவறின்றி பாத்திஹா சூரா ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
4. ஜும்ஆ கடமையான ஊரினுள் ஜும்ஆ தொழ வேண்டும்.
5. ஊரிலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் எவ்விதச் சிரமும் இன்றி 'ஜும்ஆ' தொழ வசதியிருப்பின், ஒரே ஜும்ஆதான் நிறைவேற்றப்பட வேண்டும்.
குத்பா:
ஜும்ஆ நாளன்று நிறைவேற்றப்படும் இரு குத்பாக்களையும் தொழுகைக்கு முன்பு ஓதுவது அவசியமாகும். ஜும்ஆ நாள் குத்பா ஃபர்ளான ஒன்றாகும்.
குத்பாவின் ஃபர்ளுகள்:
இரண்டு குத்பாக்களும் ஹம்து ஸலவாத்து கொண்டு தொடங்கப்பட வேண்டும். 'அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதுல்லாஹ், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலா முஹம்மதின்' என இவைகளுக்குரிய வாசகங்களை ஓதுவது அவசியமாகும்.
இரு குத்பாக்களிலும் இறையச்சம் பற்றி போதிக்கப்பட வேண்டும்.
குர்ஆன் ஷரீபிலுள்ள பொருள் பொதிந்த முழுமையான ஒரு ஆயத்தினை இரு குத்பாக்களில் ஒன்றில் ஓதுவது அவசியமாகும்.  எனினும் ஆயத்தை முதல் குத்பாவில் ஓதுவது சிறப்புடையதாகும்.
இரண்டாவது குத்பாவில் மு.ஃமின்களின் மறுமைப் பேறுக்காக துஆ செய்வது அவசியமாகும்.
குத்பாவின் ஷர்த்துக்கள்:
1. குத்பாவின் பர்ளான பகுதிகளை நாற்பது நபர்கள் கேட்கக் கூடிய அளவிற்கு சப்தமிட்டு ஓதுவது.
2. அரபி வாக்கியங்களினால் ஓதுவது.
3. நின்று ஓத சக்தியுள்ளோர் நின்று ஓதுவது.
4. இரு குத்பாக்களுக்கும் இடையில் சிறிது நேரம் அமர்வது.
5. அவ்ரத்தான (மான உறுப்புகளை) மறைப்பது.
6. உடல், ஆடை, இடம் பெரிய சிறிய தொடக்குகளை விட்டும், நஜீஸ்களை விட்டும் சுத்தமாக இருப்பது.
7. இரு குத்பாக்களின் ஃபர்ளுகள் தொழுகை ஆகியவற்றை முறையே தொடர்ந்து செய்வது.
8. கதீப் ஆணாக இருப்பது.
9. ளுஹரின் வக்தில் குத்பா ஓதுவது.
10. குத்பாக்களை தொழுகைக்கு முன் ஓதுவது.

இமாம் குத்பா ஓதும் போது குத்பாவை காது தாழ்த்தி கேட்பதைப் போன்று மௌனமாக இருப்பது சுன்னத்தாகும்.குத்பாவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரைக் கேட்டால் ஸலவாத்து சொல்வதும், ஸஹாபாக்கள் பெயரைக் கேட்டால் ரலியல்லாஹு அன்ஹு சொல்வதும், குத்பாவில் துஆ ஓதினால் அதற்கு ஆமீன் சொல்வதும் சுன்னத்துகளாகும். இமாம் குத்பா ஓதும் போது பேசுவது மக்ரூஹ் ஆகும்.

பள்ளிவாசலில் மக்களைத் தாணடிச் செல்வது மக்ரூஹ் ஆகும்.

ஜும்ஆவின் முதல் அதானிற்குப் பிறகு வியாபாரம் போன்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது மக்ரூஹும் அதன் இரண்டாம் பாங்கு அதானிற்குப் பிறகு ஈடுபடுவது ஹராமும் ஆகும்.

ஜும்ஆ தொழுகையை விட்டு விட்டு (இடைப்பட்ட நேரத்தில் ஜும்ஆ தொழ முடியாதபோது) வெள்ளிக் கிழமை பஜ்ருக்குப் பின் பயணம் புறப்படுவது ஹராமாகும்.

ஜும்ஆவின் சுன்னத்துகள்:

ஜும்ஆவிற்காக குளிப்பது, குளிக்க இயலாதோர் தயம்மும் செய்வது, நகம் வெட்டுவது, கக்கம் மற்றும் மறைவிட முடிகளைக் களைவது, மீசை கத்தரிப்பது, உடல் மற்றும் ஆடையின் அழுக்குகளை அகற்'றுவது ஆகியவை சுன்னத்துகளாகும்.

தன்னிடமுள்ள உயர்ந்த ஆடைகளை உடுத்துவது, நறுமணம் பூசிக் கொள்வது, ஜும்ஆவிற்கு ஒரு வழியாகச் சென்று வேறு வழியாகத் திரும்பி வருவது, அமைதியாகவும், கம்பீரமாகவும நடந்தே செல்வது ஆகியவை சுன்னத்துக்களாகும்.  ஜும்ஆவிற்காக நேரத்தோடு வருவது சுன்னத்தாகும். கதீபானவர் குத்பா ஓதும் நேரத்தில் வருவதே சுன்னத்தாகும்.

சூரத்துல் கஃபை ஜும்ஆவின் பகலில் அல்லது அதன் இரவில் ஓதுவது, அதிகமதிகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது, அதிகமாக துஆக்களை வேண்டுவதும், தர்மங்களையும் நன்மைகளையும் அதிகமாக செய்வதும் சுன்னத்தாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…