தாயின் பாசம்
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
ஒருநாள் ஓநாய் ஒன்று வந்து அந்தக் குழந்தைகளில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.
அப்போது ஓநாய் தூக்கி சென்ற குழந்தை யாருடையது? என்பதில் இருவருக்கும் இடையில் சர்ச்சை எழுந்தது.
இது என் குழந்தை. உன் குழந்தையைத்தான் ஓநாய் தூக்கி சென்றது என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இப்பிரச்சனை சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் நபி சுலைமான் அவர்கள்; தம் பணியாட்களை நோக்கி, 'ஒரு கத்தி கொண்டு வாருங்கள். இந்தக் குழந்தையை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு பாதி கொடுக்கலாம் என்று சொன்னார்கள்.
இது கேட்ட இளைய சகோதரி திடுக்குற்றவளாக வேண்டாம் அப்படி எதுவும் செய்ய வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள். மூத்தவளிடமே குழந்தையை கொடுத்து விடுங்கள்' என்று கலக்கத்துடன் கூறினாள்.
மூத்தவள் எவ்விதப் பதற்றமும் இல்லாமல் சகஜமாக இருந்தாள். தன் குழந்தை தன்னிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றே எந்தத் தாயும் விரும்புவாள். குழந்தையை எதுவும் செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சியதிலிருந்தே இவள்தான் உண்மையான தாய் என்று சுலைமான் நபி அவர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே குழந்தையை இளையவளிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்புக் கூறினார்கள்.
படிப்பினை:
தம்பி, தங்கைகளே!
தன் பி;ள்ளை மீது எந்தத் தாயும் மிகவும் பாசத்துடன்தான் இருப்பாள். அவன் நல்லதிற்கே எதையும் சொல்வாள், செய்வாள். எனவே நீங்கள் உங்கள் தாய் சொல்லைக் கேட்டு நல்லபடி வாழ்ந்து காட்ட வேண்டும். சரியா!
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…