எம்மைப் பற்றி
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டணம்! ஆ! பெருமைக்குரிய நகரம். இறைநேசர்கள் பல்லாயிரக் கணக்கானோர் வாழ்ந்து மறைந்த நகரம் – வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம். சுமார் 1350 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழம்பெரும் நகரம். இஸ்லாமிய கலாச்சாரம் நிறைந்திருந்த நகரம். இந்து, முஸ்லிம், கிறித்துவர் ஒற்றுமை யோடு வாழ்ந்து, மத ஒற்றுமையை பேணி வரும் நகரம். மார்க்க அறிஞர்கள், மருத்தவர்கள், பொறியியல் வல்லுனர்கள், சட்ட நிபுணர்கள், தொழிலதிபர்கள், கொடை வள்ளல்கள் வாழ்ந்து வரும் நகரம்.
காயல் நகரில் மனித நேயத்தை வளர்த்திடவும், மத நல்லிணக்கத்தை காத்திடவும், உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திடவும், வியாபார தொடர்புகளை ஏற்படுத்திடவும், நகரின் பிரச்சனைகள், நகர் மக்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள், ஆதங்கங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவு செய்திடவும் மற்றும் மக்களிடையேயுள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்திட ஒரு உந்து சக்தியாக செயல்படவும் நம் நகர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை கிடைத்திட செய்திடவும் நமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்கப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு அருமையான, வித்தியாசமான வெப்தளம் "www.kayalpatnam.in" ஆகும்.
இந்த இணைய தளம் நகரின் பழம்பெருமையையும், தனித்தன்மையையும், கலாச்சாரத்தையும், இஸ்லாமிய பண்பாட்டையும் சிந்தாமல் சிதறாமல் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து காப்பதோடு நகரின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும், காயல் நகரை சுற்றுலா மையமாகவும், உலகின் முன்னோடி – மாதிரி நகரமாக ஆக்கவேண்டும் என்ற நோக்கமும் கொண்டு செயல்படும்.
உங்கள் முன் உள்ள இந்த வெப்தளத்தின் மூலம் கருத்துக்கள், செய்திகள், தகவல்கள் பரிமாறப் படவிருக்கின்றன.
நமது இணையதளத்தில் புதிதாக பல்வேறு விஷயங்கள் பல்வேறு தலைப்புக்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கட்டுரைகள், ஆக்கங்கள் பெறப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. இந்த ஆக்கங்கள், கட்டுரைகள், படங்கள் போன்றவைகள் பல்வேறு நூல்களிலிருந்தும், ஆவணங்களிலிருந்தும், இணையதளங்களிலிருந்தும், பெரியவர்களின் வாய்மொழிகளிலிருந்தும் எடுத்து எழுதப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது உங்கள் வெப்தளம். இதில் உங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் ஆலோசனைகள்,கருத்துக்கள் நம் நகரை வளம்பெறச் செய்யட்டும். வாருங்கள்.
நிர்வாகக் குழு,
காயல்பட்டணம் டாட் இன்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…