அஹ்மது நெய்னார் பள்ளி
கயால்பட்டணத்தில் காழியாக இருந்த காழி அலாவுதீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலமும் அவர்கள் பெயரால் தைக்காவும் கே.ஏ.டி.சங்கமும் இதையொட்டியே அமைந்துள்ளது.
2005 ம் வருடம் இப் பள்ளி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டணம் பள்ளிவாசல்கள் அனைத்தும் சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக அதன்படி வக்பு செய்யப்பட்டதாகும்.
1. பிரதிவாரம் வெள்ளி மாலை புர்தாஷரீஃபு ஓதுதல்.
2. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தமாம் செய்து, நோன்பு வைக்க பிறை 29 அன்று முஹல்லா வாசிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்தல். ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க கஞ்சி ஏற்பாடு செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.
8. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை தொழவைத்து குத்பா பேருரை நிகழ்த்தப்பெறும். நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் -காதிரிய்யா திக்ரு செய்தல்
3. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃபு ஓதுதல்.
4. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.
5. இதனுடன் அமைந்துள்ள காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி வைபவம் ஷஃபான் பிறை 20 அன்று எடுத்தல்- பிறை 18 முதல் 20 வரை காலை கத்முல் குர்ஆன்ஓதி தமாம் செய்தல், இரவு மார்க்க சொற்பொழிவு,கந்தூரி அன்று மௌலிது ஷஃரிபு ஓதி இரவு நேர்ச்சை சோறு விநியோகம்.
பொது மையவாடி உண்டு.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…