Home Uncategorized குழந்தைக்கு அணியாடை கிழிக்கும் விழா

குழந்தைக்கு அணியாடை கிழிக்கும் விழா

குழந்தை உண்டாகி ஏழு மாதங்கள் ஆனதும் குழந்தை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து விடுவார்கள். அப்போது சொந்தக்காரர்களை அழைத்து, குழந்தைக்கு பயன்படும் துணிகள் – வாய் துடைக்கும் துணி, இடுப்புக்கு கீழே உள்ள துணி, குளித்தால் துடைத்தபிறகு குழந்தையை கையில் வைத்திருக்க பயன்படும் துணிகள் (இதற்கு பெயர் அணியாடை) போன்றவற்றை உருவாக்கி கொள்வதற்காக விழா போல் எடுத்து மௌலிது, ஸலவாத்து, பைத்துகள் ஓதி புதிய பருத்தி(காட்டன்) துணி நைஸானதை கிழித்து வைத்துக் கொள்வார்கள். இதில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய தேநீர், வாடா மற்றும் பண்டங்களும் திண்ணக் கொடுப்பார்கள். இதில் சூலி வாடா என்று ஒன்று செய்து அதாவது வாடா என்ற திண் பண்டத்தினுள் இன்னொரு வாடாவை வைத்து பொரித்து வைப்பார்கள்.

வீட்டில் சொந்த பந்தங்களையும், தெரிந்தவர்களையும் அழைத்து ஸலவாத்துல் நாரிய்யா மற்றும் இதர மௌலிது, பைத்துகள் ஓதி பச்சமலை சோறு என்று ஆக்கி கொடுப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிற்கு என்று தனியாக எடுத்துக் கொடுப்பார்கள்.
 

Check Also

1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்

காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…