Home Uncategorized அப்பா பள்ளி

அப்பா பள்ளி

           மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.
       ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள். காயல் நகரிலுள்ள  பள்ளிகள் இரு மினாராக்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒளு செய்வதற்கென ஹவுளுகள் கட்டப்பட்டுள்ளன.
     காயல்பட்டணம் பள்ளிவாசல்கள் அனைத்தும் சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக அதன்படி வக்பு செய்யப்பட்டதாகும்.
  மகான் ஹஜ்ரத் செய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் மகான் ஹஜ்ரத் சாமு ஷpஹாபுத்தீன் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீபை ஒட்டி இப்பள்ளி அமைந்திருப்பதால் இப் பள்ளி சாமு ஷpஹாபுத்தீன் அப்பா பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மகான் ஹஜ்ரத் சாமு ஷpஹாபுத்தீன் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பிறகே இப்பள்ளி கட்டப்பட்டது.  
       நாளடைவில் இப் பெயர் மருவி அப்பா பள்ளி என்று அழைக்கப்படலாயிற்று. இதன் பெயராலேயே இது அமைந்திருக்கும் தெருவிற்கு அப்பா பள்ளி தெரு பெயர் வரக்காரணமாயிற்று.
       முதன் முதலாக நகரில் விளையாட்டிற்கென துவக்கப்பட்ட ரெட் ஸ்டார் சங்கம் இங்குதான் உள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…