அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் அரபிக் கல்லூரி
1983 ம் ஆண்டு செப்டம்பர் 17 (ஹிஜ்ரி 1403 அரஃபா தினம்) தீவுத் தெருவிலுள்ள ஒரு சிறிய வீட்டில் 13 மாணவியரைக் கொண்டு அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரஸூல் மத்ரஸாவின் நாழிர் அப்துஷ ஷக்கூர் ஆலிம் அவர்களால் மத்ரஸா ஆரம்பிக்கப் பட்டது. மேலும் 17 மாணவிகள் சேர்க்கப்பட்டு 30 மாணவிகளைச் சேர்த்து தீவுத் தெரு பெண்கள் தைக்காவிற்கு மத்ரஸா இடம் மாற்றப்பட்டது. இம் மத்ரஸாவை நிறுவியவர் டி.எம். ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி என்பவர்கள்.
1987 ம் ஆண்டு தீவுத் தெரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வைத்து முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
1998 ம் ஆண்டு மே 9 ல் ஹிஃப்ழு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இங்கு ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்பு, தையற் வகுப்பு போன்ற தொழிற் கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
2005 ம் ஆண்டு முதல் அஃப்ழலுல் உலமா பாடமும் நடத்தப்படுகிறது.
2008 ம் ஆண்டு வரை 279 மாணவிகள் ஆலிமா அரூஸிய்யா பட்டமும், 41 மாணவிகள் ஹாபிழா பட்டமும், 6 மாணவிகள் அஃப்ழஃலுல் உலமா பட்டமும் பெற்றுள்ளனர்.
பாடத்திட்டங்கள்:
முதலாம் ஆண்டு:
தஜ்வீதுடன் ஹிஃப்ழு மனனம், நஹ்வு,மீஜான்,அஜ்னாஸ்,அஹ்காம்,துஆவுல் வளாயிஃப், மின்ஹாஜுல் அரபிய்யா பாகம்1,2 , மிஃப்தாஹுல் குர்ஆன் பாகம்1,2, மஜமூஅத்துல் அஹாதீஸ்.
இரண்டாம் ஆண்டு:
தஜ்வீதுடன் ஹிஃப்ழு மனனம், நஹ்வு,ஜன்ஜானி, ஷரஹ் ரியாழுல் பதிஆ, ஜாதுத்தாலிபீன், மின்ஹாஜுல் அரபிய்யா பாகம்3,4 , மிஃப்தாஹுல் குர்ஆன் பாகம்3,4, அஹ்லாக், அகீதத்துல் அவாம்.
மூன்றாம் ஆண்டு:
தஜ்வீதுடன் ஹிஃப்ழு மனனம், நஹ்வு,ஹிதாயா, கத்ருந் நதா, உம்தத்துஸ்ஸாரிக் பாகம்1,2 , பிதாயத்துல் ஹிதாயா, தஃப்ஸீர் ஜலாலைன், ரியாலுஸ் ஸாலிஹீன்.
ஆதாரம்: ஜஹ்ருல் ஜன்னஹ்
25ம் ஆண்டு வெள்ளி விழா மலர் 08-08-08
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…