ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி
1955ம் ஆண்டு ஜும்ஆ பத்வா வெளிவந்தது.நகரின் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸி கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் இப் பள்ளி அமைந்துள்ளது.
தமிழகத்தின் பல ஊர்களில் தாய்மொழியில் குத்பா பிரசங்கம் செய்யப்படாததல் இருந்த காலகட்டத்தில், முதன்முதலாக இந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே மிம்பரில் நின்று தமிழிலேயே குத்பா பிரசங்கம் செய்யப்பட்டு வருகிறது.
ஹிஜ்ரி 1378 ரபியுல் அவ்வல் பிறை 12 (26-09-1958) வெள்ளிக்கிழமை மௌலவி மு.க. செய்யிது இபுறாகிம் ஆலிம் அவர்கள் தலைமையில், மௌலவி பா.சு. முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் அவர்களால் வக்பு செய்யப்பட்டவுடன் அல்ஹாபிஸ் க.வி. செய்யிது முஹம்மது சாகிபு அவர்களால் தக்பீர் முழக்கத்துடன் பள்ளி திறந்து வைக்கப்பட்டது. விசேஷ தொழுகைக்குப் பின் அல்ஹாபிஸ் கதீபு சா. சாகுல் ஹமீது ஆலிம் அவர்களால் முதல் குத்பா பிரசங்கமமும் தொழுகையும் நடத்தப்பட்டது.
தென்காசி மு.ந. முஹம்மது சாகிப், கொழும்பு கே.ஏ. முஹம்மது அலி ஹாஜி, சென்னை புதுக்கல்லூரி செயலாளர் எம்.எஸ். ஆப்துல் மஜீது, எல்.கே.லெப்பைத்தம்பி ஹாஜி, பி.எஸ். ஆப்துல் காதர் ஹாஜி, என்.கே. காதர் சாகிபு ஆலிம், என்.கே. அமீர் சுல்தான் ஆகியோர் இத்திறப்பு விழாவில் பேசினர்.
இப்பள்ளியை நிர்மாணிக்க பெருமுயற்சி மேற்கொண்ட அ.க. முஹம்மது அப்துல் காதர் அவர்களுக்கும், எஸ்.ஏ. ஹபீர் ஹாஜி அவர்களுக்கும் பாராட்டுரைகள் வழங்கப்பட்டன. இறுதியில் ஜில்லாபோர்டு உறுப்பினர் எம்.டி.எஸ். முஹம்மது தம்பி நன்றி கூறினார்.
தப்லீக் ஜமாஅத்தின் மர்கஸாக செயல்பட்டு வந்த இப்பள்ளி தற்போது இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லிமீன் (I.I.M.) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…