அல்குஸ்லு(குளிப்பு)
'குளிப்பின் பர்ளை நிறைவேற்றுகிறேன்' என்ற நிய்யத்தைக் கொண்டு உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீரை ஓட்டுதலுக்குப் பெயர் குளிப்பு என்று பெயர்.இதன் ஃபர்ளுகள் 2. அவை
1. நிய்யத் 2. உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீர் ஊற்றுதல்.
முழுக்கு குளியலின் போது நகங்களின் உட்பகுதிகள், உரோமங்களின் உள், வெளிப்பகுதிகள், மல ஜலம் கழிக்க அமரும்போது பெண்ணின் மறைவிடங்களில் வெளித் தெரியும் பகுதிகள் ஆகியவற்றை நன்கு கவனித்து கழுவுதல் ஃபர்ளாகும்.
500 ராத்தல் (280 லிட்டர்) கொள்ளளவு நீர் நிறைந்த தொட்டிகளில் முங்கிக் குளித்துக் கொள்ளலாம்.
ஸுன்னத்துக்கள்:
குளிக்கும் முன் சிறுநீர் கழித்தல், மேனியிலோ, ஆடையிலோ படிந்திருக்கும் அசுத்தங்களை (நஜீஸ்களை) கழுவுதல், பரிபூரணமாக உளு செய்து கொள்ளுதல், குளிக்கத் தொடங்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லல், வாயையும், மூக்கையும் சுத்தம் செய்து கொள்ளல்,ஆரம்பத்தில் தலைக்கும் பின்பு வலது மற்றும் இடது புறங்களுக்கும் தண்ணீர் ஊற்றுதல், ரோமங்களை கோதி விடுதல், ஒவ்வொரு பகுதியின் மீதும் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல், உடலைத் தேய்த்துக் குளித்தல், கமுக்கட்டு, தொப்புள், கைமொழிகள் போன்ற இடங்களை நன்றாக கவனித்து கழுவுதல், கிப்லாவை முன்னோக்கி இருத்தல், தேவையில்லாமல் உரையாடாதிருத்தல், ஓர் உறுப்பு உலருமுன் தொடர்ந்து மற்றொரு உறுப்பைக் கழுவுதல்,குளித்த பின் வியாதி, குளிர், சளி போன்ற காரணமில்லாவிடில் துடைக்காமல் விடுதல், குளித்த பின்பு ஹைளு வந்த வழியில் நறுமணம் பூசுதல் ஆகியவை குளிப்பின் ஸுன்னத்துக்களாகும்.குளித்த பின் ஷஹாதத் கலிமாவை ஓதி, பின்பு உளுவின் துஆவை ஓதி, மூன்று முறை இன்னா அன்ஸல்னா' சூராவை ஓதுவதும் அதன்பின்,
اللهمّ اغْفرْ لـيْ ذنبيْ ووسّعْ ليْ فيْ داريْ وبارك ليْ رزْقيْ ولاتفتنيْ بما زويْت عنّيْ
என்று ஓதுவதும் ஸுன்னத்தாகும்.
சுன்னத்தான குளிப்புகள்:
ஜும்ஆ தொழுகை, இருபெருநாள் தொழுகைகள், சூரிய சந்திர கிரகணத் தொழுகைகள் ஆகியவைகளுக்காக மழை தேடி தொழுவதற்காக, ஹரம் ஷரீபிலும், மதீனா முனவ்வராவிலும் நுழைவதற்காக, தவாஃப் செய்வதற்காக, அரபா மினாவில் தங்குவதற்காக, பைத்தியம் போதை மயக்கம் தெளிந்ததற்காக, மய்யித்தைக் குளிப்பாட்டியதற்காக, ஹாஜிகள் ஜம்ரத்துல் அகபா ஊலா, உஸ்தாவில் கல் எறிவதற்காக, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதற்காக, சன்மார்க்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக, பெருந்தொடக்கு இல்லாத காபிர்கள் இஸ்லாம் ஆவதற்காக ஆகியவை சுன்னத்தான குளிப்புகள்.
ஸுன்னத்தான குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்றோ அல்லது 'இன்ன செயலுக்காக குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்து கொண்டால் சுன்னத்தை நிறைவேற்றிய நன்மைகளை அடையலாம். நிய்யத்துச் செய்யாவிட்டால் நன்மைகள் கிடைக்கமாட்டாது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…