Home செய்திகள் மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!

மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!

60 பக்க மின்புத்தகம் (eBook) வெளியீடு!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) – கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், காயல்பட்டினத்தில் – அரசு இரத்த வங்கிகளுடன் இணைந்து – இரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது.

இதுவரை நடத்தப்பட்டுள்ள 43 முகாம்கள் மூலமாக – 2114 பேர் இரத்த தானம் செய்துள்ளார்கள். இதில் – 1840 பேர் ஆண்கள்; 274 பேர் பெண்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

8 ஆண்டுகள் நிறைவுற்று – 9 வது ஆண்டாக தொடரும் மெகா அமைப்பின் இப்பணிகளை – ஆவணப்படுத்தும் முகமாக, 60 பக்கம் கொண்ட மின்புத்தகம் (eBook) – BLOOD DONATION CAMPS IN KAYALPATTINAM – OVERVIEW OF AN IMPORTANT PUBLIC SERVICE – FROM APRIL 2017 TILL DATE (JULY 19, 2025) என்ற தலைப்பில் – கடந்த ஆகஸ்ட் 15 அன்று நடந்த மெகா அமைப்பின் சுத்தந்திர தின நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அமைப்பின் துணை செயலாளர் – ஏ.எஸ்.புஹாரி இப்புத்தகத்தை வெளியிட – சமூக ஆர்வலர் PAK சுலைமான் – முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த மின்புத்தகம் – இறைவன் நாடினால் – ஒவ்வொரு முகாம் நிறைவிலும் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும்.

இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் – –

— முகாம்களின் சாராம்சம்
— ஆண்டு வாரியான முகாம்கள் தகவல்
— முகாம்கள் வாரியான தகவல்
— இரத்த பிரிவுகள் வாரியாக இரத்த தானம் செய்தோர் எண்ணிக்கை
— இரத்த பிரிவுகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸஅப் குழுமத்தில் இணைவது குறித்த விபரம் (QR Codes)
— அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் (FAQs)
— ஊடங்களில் மெகா இரத்த தானம் முகாம்கள் குறித்து வெளியான செய்திகள்
— முகாம்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு

இவண்,

நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA). [அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

Check Also

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…