ஹதீதுகளை வகைப்படுத்துதல்:
ஹதீதுகளை தொகுத்து வழங்கிய இமாம்களான நாதாக்கள் அவை கிடைத்த வழிவகையின் அடிப்படையில் தரவாரியாக பிரித்து ஆய்வு செய்து தலைப்பிட்டு தொகுத்து தந்துள்ளார்கள். இவை ஒவ்வொரு இமாம்களாலும்; வௌ;வேறு அளவுகோலைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இது ஒரு மாபெரும் கலையாக உருவெடுத்தது. இந்த கலையில் ஈடுபடுவதற்கு தனித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அரபி இலக்கணம், இலக்கியம், வரலாறு, தர்;க்க சாஸ்திரம் போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் அபரிதமான ஞாபக சக்தி பெற்றிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஹதீதுகள் கீழ்காணும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)
மேலும்
முர்ஸல், முன்கதிவு (தொடர்பு அறுந்தது),முஃளல், முஅல்லக், ஷாத் (அரிதானது) , முன்கர் (நிராகரிக்கப்பட்டது), மஃரூஃப் , முதல்லஸ் ,முஅன்அன், முத்ரஜ் , முள்தரப், மைக்லூப் (மாறாட்டம்), மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்), முஸ்னத், மர்ஃபூவு, மவ்கூஃப்-தடைப்பட்டு நிற்பது என்பது பொருள்., முஸ்னத், மக்தூவு (முறிக்கப்பட்டது), முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது), ஹபருல் வாஹித் (தனிநபர் அறிவிப்பது) என ஹதீதுகள் இமாம்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.
இந்த செய்தி எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான – ஹதீஸ்கள் என்பர்.
முத்தஃபக்குன் அலைஹி
ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.
2. மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்டது)
ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளுவு' வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளுவு' என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறாத – செய்யாத – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.
நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும்.
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
அறிவிப்பாளர்களில் பொய் பேசக் கூடியவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிருபிக்கபடாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.
4. ளயீப் (பலவீனமானது)
அறிவிப்பாளர்களில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம்.அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கீழ்கண்ட விதமாக ளயீபான ஹதீஸ்களை வகைப்படுத்தலாம்.
முர்ஸல் – எல்லா அறிவிப்பாளர்களையும் சரியாகக் கூறிவிட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முன்கதிவு – அறிவிப்பாளர்கள் இடையில் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்பார்கள்.
முஃளல் – ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.
முஅல்லக் – ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவித்தவை முஅல்லக் எனப்படும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…